திருகல்யாணம்: பக்தர்கள் வழிபாடு

திருகல்யாணம்: பக்தர்கள் வழிபாடு  

பழனி மற்றும் திருத்தணி முருகன் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்றுமாலை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சண்முகர்-வள்ளி,தெய்வானை திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை திருத்தலமான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் உற்சவர் முருகப்பெருமானுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் காவடி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து முருகப்பெருமானுக்கு தாயாருக்கும் மாலை மாற்றும் உற்சவமும், பால் பழம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
இதையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 2000 பக்தர்களுக்கு தாலி கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனிடையே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதை காண்பதற்காக, திருச்செந்தூரில் காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் மொய்ப் பணம் கொடுத்து பிரசாதம் பெற்று வருகின்றனர்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.