தி.மு.கவால் தமிழகத்திற்கு பட்டை நாமம் தான்- அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.கவால் தமிழகத்திற்கு பட்டை நாமம் தான்- அமைச்சர் ஜெயக்குமார்  
சென்னை: 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் நீதிமன்றத்தை தான் கேள்வி கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு மற்றும் சபரி ராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்தாவதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீதும் அவர்களுக்கு திரைமறைவில் வாய்மொழி உத்தரவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிமுக அரசு அலட்சியம் காரணமாக குண்டர் சட்டம் ரத்தாகியுள்ளதாக கூறினார்.போரூர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை திறப்பு விழாவில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்:

 பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. தவறு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தது அரசு. ஆனால், அதனை நீதிமன்றம் தான் ரத்து செய்துள்ளது. 

இதனால்,ஸ்டாலின் கேள்வி கேட்க வேண்டியது நீதிமன்றத்தை தான். ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. என்னுடைய நண்பர் மற்றும் அண்ணன் ரஜினி இன்னும் பல விருதுகளை பெற வேண்டும்.

மஹா புயல் காரணமாக நடுக்கடலில் சிக்கிதவித்த அனைத்து மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும். அரசு நிதிச்சுமையில் உள்ளது என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

வேலூர் தேர்தலில் தன் மகன் ஜெயிக்க வேண்டும் என பணத்தை வாரி வழங்கியவர் துரைமுருகன். பணத்தை மட்டுமே திமுக நம்பியுள்ளது. ஆனால், அதிமுக மக்களை மட்டுமே நம்பியுள்ளது.

10 ஆண்டுக்கு மேல் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக,தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. திமுகவால், தமிழகத்திற்கு பட்டை நாமம் தான் கிடைத்தது. 

இவ்வாறு அவர் கூறினார்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.