டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதி!

டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதி!


சென்னை: 

டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனை, போரூர் உலர்-கண் நோய்க்குறி நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தின் விரிவான தொகுப்பை அறிமுகப்படுத்தியது. 

தமிழக அரசின் மீன்வள மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், போரூரில் உள்ள டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையில் புதிய வசதியை இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசின் ஊரக தொழில்துறையின் மாண்புமிகு அமைச்சர்  P. பெஞ்சமின், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர், புரொஃபசர் அமர் அகர்வால், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, போரூர் – ன் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைவர் டாக்டர். கலாதேவி சதீஷ் ஆகியோரும் இந்த  தொடக்கவிழா நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.


அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் பேசுகையில்:

கண் மருத்துவவியல் உட்பட, அனைத்து துறைகளுக்கும் தரம் மற்றும் சேவையை கருத்தில்கொண்டு இயங்குகின்ற பல உயர் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை கொண்டிருப்பதால் இந்நாட்டில் மருத்துவசேவையை நாடி மக்கள் திரளாக வருகின்ற அமைவிடமாக சென்னை மாநகரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். உடல்நல பராமரிப்பு சேவைகளின் பயனளிப்பு நிலை, தரம் மற்றும் கட்டுபடியாகக்கூடிய எளிய அணுகுவசதி ஆகியவற்றை இன்னும் உயர்த்துவதற்கும், உயர்நிலை தொழில்நுட்பங்களும் மற்றும் தகுதியும், அனுபவமும் மிக்க மருத்துவ வல்லுனர்களின் நிபுணத்துவமும் முக்கியமானவை என்று தனது உரையில் அவர் கோடிட்டுக் காட்டினார். மேலும் ரஜினிகாந்த் விருது பற்றின கேள்விக்கு, ரஜினிகாந்த் எனது நண்பர் மற்றும் அண்ணன் அவர் மேலும் பல விருதுகளை வாங்குவதற்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார்.  


டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் அமர் அகர்வால்: 

“உலகளவில் 5 மில்லியன் நோயாளிகளுக்கு மருத்துவ சேவையை வழங்கியிருக்கும் நிலையில் எமது மருத்துவமனை 63வது ஆண்டில் கால்பதிக்கிறது. இத்தருணத்தில் கண் பராமரிப்பை எளிதானதாகவும், சிறப்பானதாகவும் மற்றும் அதிக துல்லியமானதாகவும் ஆக்கவேண்டுமென்ற குறிக்கோளில் நாங்கள் தொடர்ந்து உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டிருக்கிறோம். தரமான கண்பராமரிப்பு சிகிச்சை மீது மிகச்சிறப்பான அக்கறையையும், முக்கியத்துவத்தையும் கொண்டிருப்பதோடு, புதிய சிகிச்சை உத்திகளை கண்டறிந்து, அவற்றை அறிமுகம் செய்வது என்பதையே இது பிரதானமாக உணர்த்துகிறது,” 
என்று கூறினார்.

போரூர் – ன் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைவர் டாக்டர். கலாதேவி சதீஷ்:

உலர்ந்த கண்ணுக்கான இயந்திரத்தின் பயன்பாடு குறித்து பேசுகையில், “கண்ணீர் ஆவியாகுதல் மற்றும் நீர்வடிதல் என்பவை, உலர்ந்த கண் நோய்களின் இரு முக்கிய வகைகளாக இருக்கின்றன. உலர்ந்து ஆவியாகுதல் என்பது, மிக அதிகமாக காணப்படுகிற வடிவமாகும். மற்றும் மீபோமியன் சுரப்பி செயலிழப்பு (MGD) என்பதோடு இது பொதுவாக தொடர்புடையதாக இருக்கிறது. இந்த எம்ஜிடி நிலைக்கு நீண்டகால நிவாரணத்தை வழங்கக்கூடிய அதிக பயனளிக்கும் சிகிச்சையாக, தீவிர நெறிமுறைப்படுத்தப்பட்ட துடிப்புள்ள ஒளி (IRPL) என்பது இருக்கிறது. மீபோமியன் சுரப்பிகளை சுரக்குமாறு தூண்டிவிடுவது மற்றும் அவைகளை சுருங்குமாறு செய்வதும் இந்த சிகிச்சையின் இலக்காகும். மீபோமியன்
சுரப்பிகளில் திறப்பு துளைகளில் கெட்டியாகியிருக்கிற எண்ணெய் அடைப்புகளை உருக்கி, வலியேற்படுத்திக் கொடுப்பதும் இச்சிகிச்சையின் இலக்காகும்.

என்று கூறினார்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.