கலர்ஸ் அலுவலகத்தில் ரெய்டு!

கலர்ஸ் அலுவலகத்தில் ரெய்டு! 


சென்னை:


‘கலர்ஸ்’ குழுமத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் அலுவலகங்கள் உள்ளன.உடல் எடை குறைப்பு, அழகு மேம்பாடு ஆகியவற்றை செய்து வரும் இந்நிறுவனம் ஐதராபாத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

அதன்பேரில் ‘கலர்ஸ்’ குழும நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ‘திடீர்’ சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் 6 இடங்கள், சேலம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்நிறுவனத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்த சோதனையின் போது அலுவலக கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. நிறுவனங்களில் இருந்த ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. 


சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முழு சோதனை முடிந்த பிறகு தான் இந்நிறுவனம் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.