காவேரி கூக்குரலுக்காக சைக்கிள் பேரணி விழிப்புணர்வு!

காவேரி கூக்குரலுக்காக சைக்கிள் பேரணி விழிப்புணர்வு!


கோவை:

காவேரி கூக்குரல் இயக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 4 முன்னாள் ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் குழுவினர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இன்று (டிசம்பர் 1) கோவை வந்தனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் அவர்களுக்கு ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் தன்னார்வ தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘பெடல் புஷ்சர்ஸ்’ என்ற பெயரில் செயல்படும் இந்த சைக்கிள் ஓட்டுநர் குழுவில் முன்னாள் ராணுவ வீரர்கள், பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு பயணம் தொடர்பாக அக்குழுவைச் சேர்ந்த 63 வயதான திரு.பாலன் அவர்கள் கூறுகையில்:

 “ பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் (நவம்பர் 29) புறப்பட்ட நாங்கள் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பூர், அவினாசி வழியாக சுமார் 350 கி.மீ பயணம் செய்து இங்கு வந்துள்ளோம். 

இதற்கு முன்பு சத்குரு அவர்கள் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தை தொடங்கிய போதும் நாங்கள் இதுபோன்ற விழிப்புணர்வு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டோம்.

அப்போது மந்த்ராலயா, திருப்பதி, திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இப்போது, சத்குரு காவேரி கூக்குரல் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

அதற்காக முதல் பயணமாக பெங்களூருவில் இருந்து கோவை வந்துள்ளோம். இது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது” என்றார்.
இந்த விழிப்புணர்வு பயணத்தின் போது அவர்கள் தங்கள் சைக்கிள்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காவேரி கூக்குரல் இயக்கம் என்பது தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும் அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்காகவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்டுள்ள ஒரு மக்கள் இயக்கமாகும். 

இவ்வியக்கத்தின் மூலம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக, இரு மாநில அரசுகளுடன் கொள்கை அளவிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.