பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் - ரஜினிகாந்த்

பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் - ரஜினிகாந்த்   

ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ள, இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 
அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக், யோகி பாபு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் சங்கர், லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள், படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்:
ரசிகர்கள் தமது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.
தம்மை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை ஏமாற்றியது இல்லை என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், அதேபோன்று ரசிகர்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது என்று தெரிவித்தார்.
தமிழக அரசு மீது பல விமர்சனங்களை தாம் தெரிவித்திருந்த போதிலும், இசை வெளியீட்டு விழாவை நேரு விளையாட்டு அரங்கில் நடத்த அனுமதி வழங்கியிருப்பதாக ரஜினி குறிப்பிட்டார்.

Rajinikanth Mass Entry
 Video Here

TAMIL LIVE NEWS

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.