ஈரானில் பஸ் கவிழ்ந்து 19 பேர் பலி

ஈரானில் பஸ் கவிழ்ந்து 19 பேர் பலி 


டெஹ்ரான்:

ஈரான் நாட்டின் மஜாந்தரன் மாகாணத்தில் 50-க்கு மேற்பட்டோருடன் ஒரு பஸ் இன்று சென்று கொண்டிருந்தது.

பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, பயணிகளுடன் சென்ற பஸ் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Labels:

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.