குரூப் 4 தேர்வில் மீண்டும் முறைகேடா?!

குரூப் 4 தேர்வில் மீண்டும் முறைகேடா?! 
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர்.
இதனால் இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றிருக்க கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை சந்தேகத்திற்குரிய 40 பேரிடமும் விசாரணை தொடங்குவதாகவும், விரைவில் முழு அறிக்கை வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து அனைத்து மட்டங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.