மாற்று திறனாளிகளுக்கு அழைப்பு

மாற்று திறனாளிகளுக்கு அழைப்பு 


சென்னை:

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், 18 ஆண்டுகளாக, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாண்டு, 19வது விளையாட்டு போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிம்மச்சந்திரன் கூறியதாவது:

இவ்வாண்டிற்கான போட்டிகள், பிப்., 15ல், சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. வெளியூரில் இருந்து பங்கேற்க வரும் விளையாட்டு வீரர்களுக்கு உணவு, தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை, 1,000 விளையாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பங்கேற்க விரும்புவோர், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, பள்ளி சான்றிதழுடன் வர வேண்டும்.சென்னை, புறநகரில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், ஈக்காட்டுதாங்கல், பாலாஜி நகர், 4வது குறுக்கு தெருவில் உள்ள கூட்டமைப்பு தலைமையகத்தில், விண்ணப்பங்களைப் பெறலாம்.

வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், www.tndfctrust.com என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம். பிப்., 10க்குள், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு, 044- - 2225 1584 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.