ஐ.ஐ.டி. நிறுவனம் மூடியதை திறக்க அனைத்துக்கட்சியினர் ஆர்பாட்டம்

ஐ.ஐ.டி. நிறுவனம் மூடியதை திறக்க அனைத்துக்கட்சியினர் ஆர்பாட்டம்

சென்னை: 

பொது மக்கள் 120 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழியை கிண்டி ஐ.ஐ.டி. நிறுவனம் மூடியதை திறக்க வலியுறுத்தி வேளச்சேரியில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தி.மு.க. தேர்தல் அணி மாநில செயலாளர் வேளச்சேரி மணி மாறன் , அ.தி.மு.க. வட்ட சார்பில் சம்பத், துணை செயலர் கண்ணன், திமுக வட்ட செயலர் மதிவாணன், காங்கிரஸ் வட்ட தலைவர் லூயிஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலர் சுமித் , திமுக நிர்வாகிகள் பத்மராஜன், சாரதி, பேராசிரியர் பரசுராமன் , வேளச்சேரி கிராம நலச்சங்க நிர்வாகி தியாகராஐன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

120 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்த வழியை மூடியது தவறு. இதனை உடனடியாக திறக்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துவோம். 

அதற்கும் செவி சாய்க்க வில்லை என்றால் டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மணிமாறன் தெரிவித்தார்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.