ஈ.வெ.ரா குறித்து சர்ச்சை பேச்சு: ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்!

ஈ.வெ.ரா குறித்து சர்ச்சை பேச்சு: ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்!


சென்னை:

'ஈ.வெ.ரா., குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், ரஜினி வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும்' என, திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவித்துள்ளனர்.


சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த, வார இதழ் விழாவில், ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது.ஈ.வெ.ராமசாமி குறித்து, அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர்.


திராவிடர் விடுதலை கழகம் சார்பில், காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும். ரஜினி மீது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.'இல்லையென்றால், அவர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்' என, திராவிடர் விடுதலை கழக, சென்னை மாவட்ட செயலர் உமாபதி தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், ரஜினி பேச்சு குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ''சினிமாவில், வசனங்களை எழுதி வைத்து பேசியவர் அவர். துக்ளக் விழாவில், சொந்தமாக பேசியதால், குழம்பி இருப்பார்,'' என, கிண்டலடித்துள்ளார்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.