நடிகர் விஷால் மேல் முறையீடு!

நடிகர் விஷால் மேல் முறையீடு! 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்ற போதிலும், உயர்நீதிமன்ற உத்தரவின் படி வாக்குகள் எண்ணப்படவில்லை. 
சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதா, தமிழக அரசால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அதனை எதிர்த்தும், தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், கடந்த மாதம் 24ம் தேதி நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.