டிரைலர் வெளியீட்டு விழா!

டிரைலர் வெளியீட்டு விழா!




சென்னை:

மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதயகுமார் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில்  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரமணியம் சிவா,GV பிரகாஷ் , பவான் ஆகியோர் கலந்துகொண்டனர் .

நடிகர் கருணாஸ் பேசியதாவது:

"நான்கு வருடம் ஆகுது. சினிமா நிகழ்வில் பேசி. நேற்று இரவு இந்தியன்2 படப்பிடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுபாதபங்கள். வெற்றிமாறன் ,மணிமாறன் இருவரும் அந்தக் காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கதை டிஸ்கசன் போது இருவரும் அடித்துக் கொள்வார்கள். அந்தளவிற்கு ஆக்கப்பூர்வமான கதை விவாதம் செய்வார்கள். நான் பார்க்கும் உண்மையான மிகச்சில மனிதர்களில் வெற்றிமாறன் ஒருவன். சட்டமன்றத்தில் நிறையபேர் நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட நல்லா நடிக்கிறார்கள். அதனால் நாம் சினிமாவிற்கே வந்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் வெற்றிமாறனிடம் நடிக்கப் போகிறேன் என்றதும் அவர் மறுத்தார். பின் இந்தக்கதைக்கு நீங்க சரியா இருக்க மாட்டீங்க என்றார். பிறகு ஒரு கேடக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். சமுத்திரக்கனி நடிக்க சம்மதிக்கா விட்டால் இந்தப்படம் உருவாகி இருக்காது.



இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் இருக்கு. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு பிறகு படம் நடிப்பதால் இன்று வந்தேன். நிகழ்ச்சித் தொகுப்பாளனி ரம்யா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அறம் படத்தில் நடித்த நடிகை மிகச்சிறந்த நடிகை. மணிமாறன் சொன்னதை சொன்ன நேரத்தில் சரியாக எடுத்துள்ளார். என்னப்.பாடகனாக அடையாளப்படுத்தியவன் உதயா. இந்தப்படத்தின் வியாபாரத்தை வெற்றமாறன் ஆல்ரெடி முடித்துள்ளார். நாளைக்கு எனது பிறந்தநாள். நான் 50 வயதுவரை வாழ்ந்ததே பெருசு தான். என் நண்பர்கள் வெற்றிமாறன், மணிமாறன், உதயகுமார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்குப் பிறந்தநாள் பரிசு இந்த சங்கத்தலைவன் படம் தான்" என்றார்.



சமுத்திரக்கனி பேசியதாவது:



"இறைவனுக்கு நன்றி. வெற்றிமாறனுக்கு நன்றி. விசாரணை படம் பண்ணும் போது திடீர்னு போன் பண்ணி கூப்பிட்டார். இதைப் பண்ணுங்க என்றார். அதேபோல் தான் இந்தப்படமும். வெற்றி என்னை அழைத்து குதி என்றால் குதித்து விடுவேன். நான் வியக்கக் கூடிய நண்பர்கள் மணிமாறனும் வெற்றிமாறனும் தான். பாரதி சார் எழுதிய தறியுடன் படைப்பு நல்ல படைப்பு. அதை அப்படியே ராவாக படைக்க வேண்டும் என்று இந்தப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். கருணாஸ் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவர் கதாபாத்திரம் வேறமாதிரி இருக்கும். தயாரிப்பாளர் உதய் சாரை இன்று தான் பார்க்கிறேன். அவருக்கு நன்றி. இசை அமைபாளர் ராபர்ட் பெரிதாக ஜெயிக்க வேண்டும். கைத்தறி சத்தத்தோடு தான் நான் வளர்ந்தேன். அது சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி." என்றார்.



இயக்குநர் மணிமாறன் பேசியதாவது:



"வெற்றிமாறன் சாரிடம் பாரதிராஜா சார் ஒரு புக் கொடுத்தார். வெற்றிமாறன் படித்துட்டு என்கிட்ட கொடுத்தார். நானும் படித்தேன். அந்த நேரத்தில் கருணாஸ் படம் நடிப்பதைப் பற்றிப் பேசினார். நான் இந்த நாவலை கருணாஸிடம் சொன்னேன்.  பின் சமுத்திரக்கனி சாரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அப்படித்தான் படம் ஸ்டார்ட் ஆச்சு. இந்தப்படத்தில் எனக்கு நல்ல டீம் வாய்த்தது. கருணாஸ் வைத்து படம் எடுத்தால் ரிஸ்க் என்றார்கள். சுப்பிரமணிய சிவா சார் போராட்டம் சினிமாவில் தான் ஜெயிக்கும் என்றார். அது போலியான போராட்டம். ஆனால் நிஜமான போராட்டம் தோற்காது" என்றார்.





Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.