தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா!

March 24, 2020
தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா! 


சென்னை: 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 


மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: 


சென்னையில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.3 பேரும் வெளிநாடு சென்று வந்தவர்கள். 74 வயதான ஆண், 52 வயதான பெண் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள். 

அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயதான பெண் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் போரூர், புரசைவாக்கம், கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்தவர்கள். நோயாளிகள், தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல்நிலை சீராக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.tamil live news# live news# tamil live news web tv 
Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.