கொரோனா நடவடிக்கை: ரூ.2,570 கோடி நிதி

March 22, 2020
கொரோனா நடவடிக்கை: ரூ.2,570 கோடி நிதி


புதுடில்லி : 

கொரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவிற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

இந்தியாவில் இதுவரை 5 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்:


கொரோனா வைரஸின் எதிரொலியாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் அடிப்படை சேவைகளை வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதில் நகர பகுதிகளுக்கு ரூ.1,629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வாரியாக, தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்து, ஆந்திராவிற்கு முதல் தவணையாக ரூ.431 கோடி மற்றும் 2 வது தவணையாக ரூ. 870.2363 கோடி நிதி , ஒடிசாவிற்கு முதல் தவணையாக ரூ.186.58 கோடி நிதியும் , மேகாலயா மற்றும் நாகலாந்துக்கு 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான நிதியாக முதல் தவணையில் முறையே ரூ.1.515 கோடி மற்றும் ரூ.6.115 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்திற்கு முதல் தவணையாக ரூ.16.215 கோடியும், 2வது தவணையாக ரூ.70.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  அனைத்து பகுதிகளுக்கும் சேர்த்து ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு கூறினார்.
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.