ஆதாருடன் பேன் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு!

March 24, 2020
ஆதாருடன் பேன் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு!


புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் இணை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது அவர்கள் கூறியதாவது:

தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதமாக தொழில் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.

வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும்.

2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்படும்.

ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதங்களில் எந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

ஜி.எஸ்.டி., சுங்க.வரி கணக்கு தாக்கல் செய்ய தொழில்துறையினருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். 

5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.