ரஜினி மீது தொடங்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

March 10, 2020
ரஜினி மீது தொடங்கப்பட்ட வழக்கு தள்ளுபடி! 

பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையில்  கடந்த ஜனவரி மாதம் நடந்த துக்ளக் பத்திரிகை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியபோது,  சேலத்தில் 1971-ம் ஆண்டு பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் எடுத்து செல்லப்பட்டதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் மீது  அளிக்கப்பட்ட புகாரில் திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை எடுக்காததை அடுத்து, திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில்  சென்னை எழும்பூர்குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ரஜினி மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக திராவிடர் விடுதலைக் கழகம் கூறியுள்ளது.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.