சிக்குவாரா நகரமைப்பு பிரிவு ஆய்வாளர்?!

March 16, 2020
சிக்குவாரா நகரமைப்பு பிரிவு ஆய்வாளர்?! 


திருவேற்காடு:

திருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு பிரிவு ஆய்வாளராக ராஜேந்திரன் உள்ளார். 

இவருக்கு அப்ரூவல் ஊழல் வழக்கில் சிக்கி ஆவடி நகராட்சி நிர்வாகம் தீர்க்கோடு ஏற்படுத்திய பெருமையும்  உண்டு.

ராஜேந்திரன் இதற்கு முன்பு தாம்பரம் பல்லாவரம் போன்ற நகராட்சிகளில் அப்ரூவல் வழங்கியதில் பல முறைகேடுகளில் ஈடுபட்டு  பல கோடிகளுக்கு பினாமி சொத்துகள்  சேர்த்து வைத்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவருகின்றன. 

இவர் பாக்கெட்டில் எப்போதும் ஒரு எலுமிச்சை பழம் வைத்திருப்பாராம்.  ஆவடி நகராட்சி நகரமைப்பு பிரிவில்  இருந்த போது பல பிளான்கள் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன.  

ஆவடி நகராட்சியில் தீபாவளி அன்று விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதை முன்கூட்டியே தெரிந்து ராஜேந்திரன் தப்பித்து ஓடிவிட்டாராம்.  பிறகு சொந்த ஊர் பரமக்குடி வட்டாரத்தில் தெரிந்த ஊழல் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நட்பு மூலம் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் விஜிலென்ஸ் அதிகாரிகளை  கையில் போட்டுக்கொண்டு மாதமாதம் பரிசுப்பொருட்கள் வழங்குவதாக நகராட்சி அதிகாரிகள் வாய்மொழியாக பேசப்பட்டு வருகிறார்கள்.

ராஜேந்திரன் ஆவடி மாநகராட்சியில்  இருந்தபோதும் முறைகேடுகள் ஈடுபட்டதால்   இவரை திருவள்ளுவர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். அங்கும் இவரது கை சும்மா இல்லாமல் மீண்டும் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருகிறாராம்.

தற்போது திருவேற்காடு நகராட்சி வந்தபோது ஆணையரை  கையில் போட்டு தனது லஞ்ச  பணியை மீண்டும் மேற்கொண்டுள்ளாராம். புலிக்கு  பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழி போல தனது 2 மகன்கள் வந்து பொதுமக்களிடம் பேரம் பேசி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் மறைமலைநகர் நகர பிரிவில் இருக்கும் ஆய்வாளர் வெங்கடேசன் அவர்களை ஆவடி மாநகராட்சி பதவி உயர்வு பெற்று தருவதாக பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் உதவியாளர் சரவணன் அவர்கள் பெயரை பயன்படுத்தி நகரமைப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளை பதவி உயர்வு வேண்டுமா? வாங்க உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்று ஏலம் சீட்டு நடத்தி வருகிறாராம்.

இவர் ஆணையருடன் சேர்ந்து தற்போது பிளான் அப்ரூவல் வியாபாரத்தை செம்மைப்படுத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன.  லஞ்ச ஒழிப்பு துறை இவரை தொடர்ந்து கண்காணித்தால் பல உண்மைகள் வெளிவரும் என சக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.