புதிய நேரக்கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அறிவிப்பு

March 27, 2020
புதிய நேரக்கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அறிவிப்பு  


சென்னை:

மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 


இது போல் பெட்ரோல் நிலையங்களும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தமிழகத்தில் முதற்கட்டத்தில் உள்ளது என முதல்வர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.


சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர்மோடி உடன் ஆலோசித்து தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் தமிழகம் முதற்கட்டத்தில் உள்ளது. அவை இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது.

மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்த முடியும். அனைத்து துறைகள் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம். 


ஓமந்தூரார், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் துவக்கப்பட்டுள்ளது. சளி, இருமல் காய்ச்சல் இருந்தால் சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.

மக்களின் வசதிக்காக 12 அரசு ஆய்வகங்கள், 2 தனியார் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் நர்சுகள், 530 டாக்டர்கள் ஆயிரம் லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.