அச்சுறுத்தும் வேளாங்கண்ணி கடல்: பக்தர்கள் அச்சம்!

March 11, 2020
அச்சுறுத்தும் வேளாங்கண்ணி கடல்: பக்தர்கள் அச்சம்!  

வேளாங்கண்ணி

கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கடலில் மூழ்கிய 18 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


கடந்த 2 மாதங்களில் வேளாங்கண்ணி கடலில் 6 பேர் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தொடரும் இந்த அவலத்துக்கு ` வேளாங்கண்ணி கடலில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்' என்று அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோயில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் என மும் மதத்தினரும் வந்து வழிபடும் ஆலயங்கள் அருகருகே அமைந்துள்ளன. இதனால் தினத்தோறும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் ஆயிரக்கணக்கானோர் நாகைக்கு வந்து செல்கின்றனர்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29 -ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். 

இந்தச் சமயத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருவார்கள். மேலும், ஆங்கிலப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற முக்கிய கிறிஸ்துவ பண்டிகை நாள்களிலும், விடுமுறை நாள்களிலும் வேளாங்கண்ணியில் கூட்டம் அலைமோதும். அப்படி வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி கடலில் குளித்து மகிழ்கின்றனர். 

இவ்வாறு அவர்கள் குளிக்கும்போது திடீரென எழும் ராட்சத அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.கடந்த 8-ம் தேதி ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் குமார், தன்னுடன் பயிலும் 80 மாணவர்களுடன் தொழில்பயிற்சி பெற புதுச்சேரிக்கு வந்தனர். அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு வந்தவர்கள், கடலில் குளித்தபோது, பிரனேஷ்குமாரையும் அவரின் நண்பர் திவ்யபிரகாசையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. உடனே பதறிப்போன நண்பர்கள் அலையில் சிக்கிய இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. உடனே, கடலோரக் காவல் படையினர் மற்றும் மீனவர்கள் கடலில் இறங்கி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரனேஷ்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். திவ்யபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய உயிரிழப்புகள் அடிக்கடி நடந்த வண்ணமே இருக்கிறது. கடலோரக் காவல் படையினர், போலீஸார் மற்றும் மீனவர்கள் இருந்தபோதிலும் உயிர்ப் பலிகளைத் தடுக்க முடிவதில்லை. கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

கடலில் மூழ்கிய 18 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே, `வேளாங்கண்ணி கடலில் ராட்சத அலைகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க, கடலில் சுமார் 700 மீட்டர் நீளத்துக்கும் 200 மீட்டர் அகலத்துக்கும் தடுப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.