அடுத்து 'ஹன்டா' வைரஸா?!

March 25, 2020
 அடுத்து 'ஹன்டா' வைரஸா?!  


பீஜிங்: 


நம் அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 'ஹன்டா' வைரஸ் எனப்படும் எலி காய்ச்சலுக்கு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பீதி ஏற்பட்டு உள்ளது.

சீனாவில் முதன் முதலாக தென்பட்ட, கொரோனா வைரஸ், தற்போது உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில், இந்த வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. 


இந்த நிலையில், யுனான் மாகாணத்தில் இருந்து ஷான்டாங்க் மாகாணத்துக்கு, பஸ்சில் சென்ற ஒருவர், திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு, ஹன்டாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வைரஸ், எலிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக் கூடியது.

அவருடன் பஸ்சில் பயணம் செய்த, மேலும், 32 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் முடிவுகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக, ஹன்டா வைரஸ் தோன்றியுள்ளது, சீன மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Labels:

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.