ஊடகம் ஜனநாயகத்தின் மய்யத்தூண்- கமலஹாசன்

March 06, 2020
ஊடகம் ஜனநாயகத்தின் மய்யத்தூண்- கமலஹாசன்  மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட செய்தி  குறிப்பில்: 

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று “ஊடகம்” என்பது பழைய செய்தி.

இன்றைய தரம் தாழ்ந்த அரசியல் நிர்வகிக்கும் “ஜனநாயகத்தில்” ஊடகம்,
நான்கில் ஒன்றல்ல அது மய்யத்தூண்.

மக்களிடம் ஊடகங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியால், இந்திய ஜனநாயகத்தின் மாண்பு பல முறை காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழின் செய்தியாளர் தாக்கப்பட்டிருப்பது, ஊடக சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால்.

இதை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது.
கருத்தியல் ரீதியாக பதில் அளிக்க முடியாமல் திணறும் ஆளும் அரசின் இயலாமையை மறைத்திட, வன்முறையை கையில் எடுப்பது மிகவும் ஆபத்தான போக்காகும்.

நாக்கில் வன்முறை சுமந்து திரியும் சில அரசியல்வாதிகள் விதைத்தது இது.
இந்த வன்முறை விஷச்செடிகள் , உடனே களையப்பட வேண்டும்.
அதை நாம் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் எப்போதும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.