திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் தகனம்!

March 08, 2020
திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் தகனம்! 

சென்னையில் நேற்று நள்ளிரவு காலமான தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பழகனின் உடல், மாலையில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, கண்ணீர் மல்க, பிரியா விடை கொடுத்தனர். 
திமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்திருந்த அன்பழகன், சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 97 .

கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த அன்பழகன் உடலுக்கு, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, வைகோ, கி. வீரமணி, ஜி.கே. வாசன், கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள், மலர் அஞ்சலி செலுத்தினர்.
அன்பழகனின் இறுதி ஊர்வலம் மாலையில், கீழ்ப்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் , சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, கண்ணீருடன் மறைந்த தலைவருக்கு, பிரியாவிடை கொடுத்தனர். அப்போது, துரைமுருகன், கண்ணீர் விட்டு அழுதார்.
அன்பழகனின் இறுதி ஊர்வலத்தில், வழிநெடுக திமுகவினர், முழக்கமிட்டவாறு, வந்தனர். " நவில்தோறும் நூல்நயம் போலும் பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு " எனும் குறளுக்கு ஏற்ப, வாழ்நாள் முழுவதும் கருணாநிதியுடன் நட்பு பாராட்டியவர் அன்பழகன். தமிழக அரசியல் வரலாற்றில், அன்பழகன் , கடந்த அரை நூற்றாண்டுகாலம் தடம்பதித்து, மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.