YES BANK: என்ன தான் நடந்தது?!

March 07, 2020
YES BANK: என்ன தான் நடந்தது?!  

கொரானா வைரஸ், யெஸ் வங்கி பிரச்சினை உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
வராக்கடன்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தைக் ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடனேயே தொடங்கின. 
சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1450-க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்தது.
பின்னர் மீண்ட போதிலும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிவுடன் 37,576 ஆக இருந்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் அதிகபட்சமாக 441 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 279 புள்ளிகள் சரிவுடன் 10,989 ஆக இருந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் சரிந்து, 73 ரூபாய் 78 காசுகளாக இருந்தது.

Yes வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களின் முழு பணமும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்திற்குள் Yes வங்கி, மறு சீரமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
வாராக்கடனால் தத்தளிப்பு... பணம் எடுக்க கால்கடுக்க காத்து கிடக்கும் வாடிக்கையாளர்கள்... பங்கு விலை சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி இப்படி அடுத்தடுத்த சிக்கலில் தள்ளாடுகிறது, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான Yes Bank.
வோடாபோன், ஜெட் ஏர்வேஸ் , ஐ.எல் அன்ட் எப் எஸ் என்ற நிதி நிறுவனம் உள்ளிட்டவைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கடனாக அள்ளி கொடுத்ததே, Yes Bank - யின் இந்த பரிதாப நிலைமைக்கு காரணம்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு, 2004 - ல் தொழிலதிபர்கள் ராணா கபூர் - அசோக் கபூர் என இரட்டையர்களால் துவக்கப்பட்ட Yes Bank , கடந்த 3 ஆண்டுகளில், படிப்படியாக வீழ்ச்சி அடைந்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 
ஓராண்டுக்கு முன் சுமார் 300 ரூபாய் என்ற அளவில் இருந்த Yes Bank பங்குகளின் விலை, தற்போது, 16 ரூபாய் அளவுக்கு வீழ்ச்சியடைந்து , அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் 50 சதவீதம் பங்கு விலை சரிவடைந்துள்ளது.
வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் Yes Bank நிர்வாகத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் வசப்படுத்தி, ஸ்டேட் வங்கியின் முன்னாள் நிதித்துறை தலைவர் பிரசாத் குமாரை, நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
Yes Bank - ன் நிதி நெருக்கடி குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, Yes Bank - ன் தலைவரே முறைகேட்டில் ஒரு அங்கமாக இருந்ததாக குற்றஞ்சாட்டினார். 
சொத்துக்களை மீறி Yes Bank தவறான வகையில் கடன்களை வழங்கியதாகவும், இதுவே நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வங்கியில் முதலீடு செய்ய ஸ்டேட் வங்கி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Yes Bank -ன் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக கூறிய அவர், டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களின் பணம் முழுவதும் பாதுகாப்பாக உள்ளது என்றார். ஏப்ரல் 3 - ம் தேதி வரை, மாதம் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு, விரைவில் மாறும் என்றும், ஒரு மாதத்திற்குள், Yes Bank மறு சீரமைப்பு பணி, முடிவடைந்து விடும் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். இதனிடையே, Yes Bank - ஐ மறுகட்டமைப்பு செய்வதற்கான வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.