144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

April 03, 2020
144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!


சென்னை: 

சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். 

சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு நிவாரண பொருட்களை  வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

 அப்போது அவர் கூறியது: 


வெளிமாநில தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வேறு மாநிலகளில் இருந்து  மளிகைப் பொருட்கள் வரவேண்டி உள்ளது. தமிழகத்தில் இருந்து சென்று வேறு மாநிலத்தில் பணிபுரிவர்களின் எண்ணிக்கை 7,198 பேராக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனாவின் அபாயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சட்டம் தன்  கடமையைச் செய்யும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
 

மக்களின் தேவைகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வைத்துக் கொள்ள  வேண்டும். அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. ஜிஎஸ்டி உள்ளிட்ட அரசின் வருவாய் குறைந்த போதிலும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றார்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.