தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 50 பேர்

April 19, 2020

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

கடந்த ஐந்து நாட்களாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-க்கு கீழ் இருந்தது. இந்நிலையில் இன்று 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இன்றைய 105 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நான்கு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 40,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 21,381 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 20 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.