ஊரடங்கு நீடிக்குமா?!

April 11, 2020
ஊரடங்கு நீடிக்குமா?! சென்னை:


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 


தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.


அத்துடன் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும் முடிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.இதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், ஊரடங்கு குறித்து முடிவு எடுப்பதற்காக நாளை சிறப்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.