தொடர்ந்து கட்டுப்பாடு காக்க வேண்டும்- கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

April 30, 2020
தொடர்ந்து கட்டுப்பாடு காக்க வேண்டும்- கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 


சென்னை: 

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அதன் விவரம் வருமாறு:-

கொரோனா பாதிப்பை ஒட்டி கடந்த 4 நாட்களாக செயல்பாட்டில் இருந்த முழு ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்து மே மாதம் 3-ந் தேதி வரை ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய கடைகள் திறக்கப்படும்.

 எனவே பொதுமக்கள் கூட்டமாக இல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லாமல் நடந்து சென்று தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும்.

கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் காய்கறி வாங்க அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் காய்கறி வாங்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டாம். உங்கள் வீடுகள் அருகில் உள்ள பகுதிக்கே காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு காய்கறி வாங்கி கொள்ளலாம்.

எனவே சென்னை மாநகர மக்கள் தொடர்ந்து கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIDEO HERE:

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.