தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு!

April 09, 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு! 


சென்னை: 

தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த 

சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: 

தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 

தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 60,739 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேரும் உள்ளனர். சிகிச்சை அளித்த 4 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 பேரின் உடல்நிலைமை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதுவரை 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களில் ஒருவர் 82 வயதானவர். பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

 இவ்வாறு அவர் கூறினார்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.