10 ஆம் வகுப்பு பொது தேர்வு: மறுபரிசீலனை செய்ய வேண்டும்- சரத்குமார்

May 14, 2020
10 ஆம் வகுப்பு பொது தேர்வு: மறுபரிசீலனை செய்ய வேண்டும்-   சரத்குமார்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்: 

தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் 10 - ஆம் வகுப்பு தேர்வும், விடுபட்ட 11ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

கொரோனா பரவல் அச்சத்தால், மாணவர்கள் பலர் புலம் பெயர்ந்து பெற்றோர்களுடன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், பயணிகள் ரயில் இயக்கம் இல்லாததாலும், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதாலும், மாணவர்களுக்கென ஒதுக்கப்படும் தேர்வு மையத்திற்கு தற்போதைய சூழலில் அவர்கள் திரும்பி வந்து தேர்வு எழுதுவதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆதலால், மாணவ / மாணவியர் வசதிக்கேற்ப தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலுள்ள தேர்வு மையத்தை அவர்களது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து, மாணவர்கள் தேர்வெழுத வசதி ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

மேலும், தேர்வு மையத்தை மாணவர்களே தேர்வு செய்யும் பட்சத்தில், மன உளைச்சல், குழப்பம், பதற்றம், அச்சம் ஏதுமின்றி மாணவர்கள் அமைதியுடன் நிறைவாக தேர்வு எழுதி வெற்றிபெற வாய்ப்பாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், இதனை செயல்படுத்துவதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகளில் சிரமம் இருப்பின், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் கருதி அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு தேதியினை ஒத்தி வைப்பதற்கு மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

actor sarath kumar press release# actor sarath kumar# samathuva makkal katchi

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.