காவலர்கள் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினார்கள்!

May 31, 2020
காவலர்கள் குணமடைந்து  மீண்டும் பணிக்கு திரும்பினார்கள்! 

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, 1 உதவி ஆய்வாளர் உட்பட 62 ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1 உதவி ஆய்வாளர், 49 காவலர்கள் மற்றும் 12 பெண் காவலர்கள் என மொத்தம் 62 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

மேற்படி 62 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் புதுப்பேட்டை, ராஜரத்தினம் மைதானத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் காவல் ஆணையாளர் அனைத்து போலீசாருக்கும் கபவாத சூப் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) .எச்.எம்.ஜெயராம், இ.கா.ப., இணை ஆணையாளர் (தலைமையிடம்) ஏ.ஜி.பாபு, இ.கா.ப., துணை ஆணையாளர்கள் ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), எம்.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு) ஆயுதப்படை துணை ஆணையாளர்கள் கே.சௌந்தர்ராஜன், ஆர்.ரவிச்சந்திரன், கே.சோமசுந்தரம் (மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.