மழைக்கு வாய்ப்பு- வானிலை

May 13, 2020
மழைக்கு வாய்ப்பு- வானிலை  


சென்னை:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய  பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது, சென்னையை பொறுத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

சேலம், தர்மபுரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என்பதால் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 4 சென்டி மீட்டர் மழையும், கடலாடியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.