ராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம்

May 01, 2020

ராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம்தமிழகத்திலேயே சென்னையில், அதுவும் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு 120-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் ராயபுரத்தில் உள்ள குறிப்பிட்ட தெருவில் மட்டுமே 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த தெருவுக்கு சீல் வைத்த போலீஸ், அங்கிருந்து யாரும் வெளியேறாதபடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள், தங்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு திடீரென ஒன்றுதிரண்டனர்.

பால், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தங்களை வெளியே விடுவதில்லை என போலீசாருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற ராயபுரம் காவல் உதவி ஆணையர் தினகரன், இனி தெருவுக்குள்ளே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்ததோடு, தற்போது இங்கு கூட்டமாக கூடியதற்கே பல பேருக்கு தொற்று ஏற்படும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். இதனை உணர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.