டாஸ்மாக் கடைகளை திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

May 05, 2020
டாஸ்மாக் கடைகளை திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! 


கொரோனா அச்சுறுதல் காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வருகிற மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது அனைவரையும் பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

கடந்த 40 நாட்களாக அமலில் இருக்கும் ஊரடங்கால் பல குடும்பங்கள் வேலையிழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவித்து வரும் இந்த சமயத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது என்பது மேலும் குழப்பத்தையும், பிரச்சனையும் ஏற்படுத்தும். எனவே ஊரடங்கு காலத்தில் இருந்து தற்போது வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழகம் மிக சிறந்த மாநிலமாக உருவாகிருக்கிறது. 

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மக்களும் கட்டுகோப்பாக
இருக்கிறார்கள். இதனை பொன்னான வாய்ப்பாக எடுத்து கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

எனவே வருகிற மே7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற
அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.