சென்னையில் ஒரே நாளில் 697 ஆட்டோக்கள் பறிமுதல்!

May 19, 2020
சென்னையில் ஒரே நாளில் 697 ஆட்டோக்கள் பறிமுதல்!


சென்னை:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவு கடந்த 4-ந்தேதி முதல் ஓரளவு தளர்த்தப்பட்டது. கடைகள் திறப்பு நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தநிலையில் கடைகள் அடைக்கப்பட்ட பின்னர் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

அதன்படி ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றியதாக தமிழகத்தில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 737 ஆக உயர்ந்து உள்ளது.

3 லட்சத்து 94 ஆயிரத்து 381 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரூ.5 கோடியே 75 லட்சத்து 77 ஆயிரத்து 479 அபராத தொகை வசூலாகி உள்ளது.

சென்னையில் ஊரடங்கு மீறல் தொடர்பாக நேற்று 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 157 மோட்டார் சைக் கிள்கள், 59 ஆட்டோக்கள், 16 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 232 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 5 மோட்டார் சைக்கிள்கள், 638 ஆட்டோக் கள், 3 இலகு ரக வாகனம் என மொத்தம் 646 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதில் ஊரடங்கு, சாலை விதிகள் மீறியதாக மொத்தம் 697 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.