வங்க கடலில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு...சென்னை வானிலை மையம்

May 13, 2020

தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. ஆகையால், வங்கக்கடல் பகுதியில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில்;- தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

இது வரும் 15-ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். அதனைத் தொடர்ந்து 16-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15ம் தேதி 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், 16ம் தேதி 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், 17ம் தேதி 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்ககூடும் என்பதால் தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 10-செ.மீ., கீழணை 5-செ.மீ., திருவிடைமருதூர், ராமேஸ்வரம், கும்பகோணம், சிற்றாறில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.