‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க ரூ.7,500 கோடி மதிப்பில் பட்ஜெட் ஒதுக்கீடு

May 13, 2020

‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க ரூ.7,500 கோடி மதிப்பில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-இல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் 'அவதார்'. சையின் பிக்‌ஷன் திரைப்படமான இதை ஹாலிவுட் முன்னணி இயக்குநர் ஜேமஸ் கேமரூன் இயக்கியிருந்தார். உலகிலுள்ள பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் 2,500 கோடிக்கு மேல் அமெரிக்க டாலர்களை வசூலித்து உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னிலையில் உள்ளது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம் என்று படக்குழு அறிவித்தவுடனே படம் எப்போ வரும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.


இதனையடுத்து படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கேமரூன், அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது 'அவதார் 2' படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார்.

அநேகமாக இந்த பாகம் வெளியான பிறகு வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று பேசி வருகின்றனர். முந்தைய பாகத்தின் வசூலை விட இரண்டு மடங்காக உயரால் எனவும் கூறப்படுகிறது.


இதனிடையே 'அவதார் 2' 2020-ஆம் ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

அத்துடன் படத்தின் மூன்றாம் பாகம் 2023 டிசம்பரில் வெளியாகும் எனவும், படத்தின் 4ஆம் பாகம் 2025 டிசம்பரில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 5ஆம் பாகம் 2027 டிசம்பரில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார். இந்தப் பாகங்களை எடுக்க ஒரு பில்லியன் டாலர் வரை பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி ஆகும்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.