சரக்கு ரயில் மோதி விபத்து தண்டவாளத்தில் உறங்கிய 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு

May 08, 2020

மகாராஷ்டிராவில் சிறப்பு ரயிலை பிடிக்க 45 கி.மீ  நடந்து வந்தவர்கள் ஒய்வெடுக்க தண்டவாளத்தில் தூங்கிய போது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 வெளிமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஊரடங்கில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிராவில் பணிபுரியும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயிலை பிடிக்க 45 கி.மீ ரயில்  தண்டவாளத்தில் நடந்து வந்துள்ளனர்.

அவுரங்காபாத் ரயில் நிலையம் அருகே ஒய்வெடுக்க தண்டாவளத்தில் படுத்து உறங்கி உள்ளனர். அதிகாலை 5.15 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.