அனைவரும் தேர்ச்சி: மாணவ மாணவிகள் உற்சாகம்!

June 10, 2020
அனைவரும் தேர்ச்சி: மாணவ மாணவிகள் உற்சாகம்!  


சென்னை : 

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தாமலேயே அனைவரும், 'ஆல் பாஸ்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதோடு சேர்ந்து நடத்த திட்டமிட்டிருந்த, பிளஸ் 1 வகுப்புக்கான விடுபட்ட பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 மறு தேர்வுக்கான தேதி மட்டும், பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 25 முதல், ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு; பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, சில பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.

இம்மாதம், 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்து, தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்தது.


அரசு அறிவிப்புக்கு தடை செய்யக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் பக்தவத்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தமிழகத்தில், பல மாவட்டங்களில், கொரோனா நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எதுவும் நேர்ந்தால், யார் பொறுப்பு?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, ரத்து செய்ய வேண்டும்' என, அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். 

இதற்கிடையில், தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள், 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தன.இதனால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்த பின், முதல்வர் இ.பி.எஸ்., தொலைக்காட்சி மூலம் மக்களிடையே பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்த கல்வி ஆண்டுக்கான, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்; பிளஸ் 1 வகுப்பில், தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன, வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் புதிய பாடத் திட்டம்; வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், தொழிற்கல்வி, கணக்கு பதிவியல் பழைய பாடத்திட்டம் தேர்வு ஆகியவற்றை, ஜூன், 15 முதல், 25 வரை நடத்த, அரசு ஆணை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், தள்ளிவைப்பது குறித்து, அரசு பரிசீலிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
எனவே, அரசு விரிவாக ஆய்வு செய்தது.

இந்த செய்தியை கேட்டதும் மாணவ மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.