ஜெ.அன்பழகன் காலமானார்: கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம்!

June 10, 2020
ஜெ.அன்பழகன் காலமானார்: கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம்! 


சென்னை: 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் 62 வயதில் காலமானார்.

தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், 62, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடந்த 2ம் தேதி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கு, 'வென்டிலேட்டர்' வாயிலாக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், அவரது உடல்நிலையில் மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து இன்று(ஜூன் 10) காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் காலமானார். அவரது உடல், கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

1958 ம் ஆண்டு ஜூன் 10 அன்று பிறந்தவர். பிறந்த நாள் அன்றே அவர் காலமானார். பி.ஏ., பொருளாதாரம் படித்துள்ள அவர், கடந்த 2001 ல் முதன்முறையாக சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.