சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தம்!

June 15, 2020
சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தம்! 


சென்னை:


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கால் முடங்கியிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளையும் மீண்டும் துவங்க கடந்த மாதம் கடுமையான நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.


இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடுமையாக அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நான்கு மாவட்டங்களிலும் வரும் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து வரும் ஜூன் 19 முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளையும் நிறுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். 


தமிழக அரசு முழு முடக்கத்தை அறிவித்துள்ளதால் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.