வந்தது கொரோனா: போனது உயிர்கள்!

June 29, 2020
வந்தது கொரோனா: போனது உயிர்கள்!   


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 29) ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,949 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3841 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 108 பேர். 

இன்று மட்டும் 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,379 பேர் ஆண்கள், 1,570 பேர் பெண்கள். 


மொத்தத்தில் கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 53,124 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 33,079 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது.


தமிழகத்தில் 90 ஆய்வகங்கள் (அரசு - 47 மற்றும் தனியார் - 43) உள்ளன. இன்று மட்டும் 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 749 ஆக உள்ளது.


                           வயது வாரியாக பாதிப்பு
12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 4,225 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 71 ஆயிரத்து 728 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 271 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று மட்டும் கொரோனா பாதித்த 62 பேர் உயிரிழந்தனர். அதில், 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,141 ஆக அதிகரித்துள்ளது.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.