தொடர் ஊரடங்கு: பசியுடன் சாகும் நிலைமை: கதறும் கூலி தொழிலாளிகள்!

June 30, 2020
தொடர் ஊரடங்கு: பசியுடன் சாகும் நிலைமை: கதறும் கூலி தொழிலாளிகள்!  
சீனாவில் தொற்றத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வணிக நிறுவனங்கள் முதல் மக்கள் கூடும் சந்தைகள் வரை மூடப்பட்டுள்ள நிலையில், அதை நம்பியுள்ள மக்கள் வாழ்வாதாரத்தைத் தொலைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தினக் கூலித் தொழிலாளர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள வணிக நிறுவனங்களை மூட சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டதன் விளைவாக, என்ன செய்வதென அறியாமல் கண்ணீருடன் தவிக்கின்றனர் அன்றாடக் கூலித் தொழிலாளிகள்.
வறுமை காரணமாக, தினந்தோறும் கூட்டம் குவியும் தி.நகரையே வாழ்வாதாரமாக நம்பி பொருட்களை விற்றும், கடைகளில் கூலிக்கும் பணியாற்றும் இவர்களின் வாழ்க்கையை தொற்று வைரஸான கொரோனா சிதைத்துள்ளது.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கிறது.
"கோயம்பேடு மார்க்கெட்டை நம்பி லட்சம் பேர் வாழ்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் மார்க்கெட்டும் இல்லை. இதனால் ஏழை வியாபாரிகள் குமுறுகின்றனர்.  
  மக்கள் கதறல்! 
"கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவச் சொல்கிறீர்கள். எங்களுக்கு குடிக்கவே நல்ல குடிநீர் இல்லை. நாங்கள் எங்கிருந்து சோப்புப் போட்டுக் கழுவுவது?" எனக் குமுறுகிறார் கூலித் தொழிலாளி ஒருவர்.
எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிச்சயம் உதவி செய்ய வேண்டும் இல்லை என்றால் நாங்கள் குடும்பத்தோடு சாக வேண்டியது தான் என்று ஏழை மக்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

சிலர் வெளி மாநிலங்களில் சிக்கி இருப்பதால் அவர்கள் இங்கே வர முடியாத சூழ்நிலையில் பசியுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.
ஜூலை 31 வரை ஊரடங்கு என்ற செய்தி கேட்டதும்  எங்கள் தலையில் இடியை போட்டது போல் இருக்கிறது என கூலி தொழிலாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.  
இந்த சூழ்நிலையில் அரசு எடுக்கும் முடிவு தான் என்ன? பார்ப்போம்.


     Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.