நாடு முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு: முழு விபரம்!

June 29, 2020
நாடு முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு: முழு விபரம்!  


புதுடெல்லி:

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு 2.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு 2.0 தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:-


* ஊரடங்கு தளர்வு 2.0 ஜூலை 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

* பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி மையங்கள், சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரெயில், சினிமா, உடற்பயிற்சி நிலையம், நீச்சல் குளம், மத கூட்டங்கள் உள்ளிட்டவை செயல்பட
ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. 

* சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம், மதம் நிகழ்ச்சிகளும் மக்கள் கூட்டமாக கூடவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.

* இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் உள்ள முழு ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையிலேயே இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டும்
விலக்கு அளிக்கப்படுகிறது.

* பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பயண நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

* உள்நாட்டு விமானங்கள், பயணிகள் ரெயில் சேவைகள் குறைந்த பட்ச எண்ணிக்கையில் இயங்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை பகுதி வாரியாக தொடர்ந்து நீட்டிக்கப்படும்.


* ’UNLOCK-2’ வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகிறது என்பதை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதிபடுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? என்று பார்ப்போம்.

 
Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.