இத்தனை காவலர்களுக்கு கொரோனா தொற்றா?!

June 18, 2020
இத்தனை காவலர்களுக்கு கொரோனா தொற்றா?!


தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. 


இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.சென்னையில் 35 ஆயிரத்து 556 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 461 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவதுசென்னை காவல்துறையில் இதுவரை 788 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

மேலும் மருத்துவமனை கண்காணிப்பில் 39 காவலர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சென்னை மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி (47) சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக காவல்துறை அதிகாரி ஒருவர் முதன்முறையாக இறந்துள்ளார்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.