சாத்தான்குளம் காவல் நிலையம் கூண்டோடு மாற்றம்!

June 29, 2020
சாத்தான்குளம் காவல் நிலையம் கூண்டோடு மாற்றம்! 


சாத்தான்குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்ததில் ஏற்பட்ட தகராறில் கைதுசெய்யப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர்.


காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.


இதற்கிடையே, காவல்நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், சாத்தான் குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிற காவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், புதிய ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள் மற்றும் 17 காவலர்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெர்னட் சேவியர், சாத்தான் குளம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கோவில்பட்டி மற்றும் புதுக்கோட்டையில் பணியாற்றும் மணிமாறன், முத்துமாரி ஆகிய இருவர் எஸ்.ஐ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், சுற்றுவட்டாரத்தில் பணியாற்றும் 17 காவலர்கள் (எஸ்.எஸ்.ஐ., தலைமை காவலர்கள் உள்பட) சாத்தான் குளத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.