காவல் நிலையம் வரை சென்ற ஜி.பி முத்து வீடியோ: போலீசார் எச்சரிக்கை!

June 21, 2020
காவல் நிலையம் வரை சென்ற ஜி.பி முத்து வீடியோ: போலீசார் எச்சரிக்கை!   
டிக்டாக்கை பயன்படுத்துபவர்களில் ஜி.பி. முத்துவை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ”டிக்டாக் நண்பர்களே..” என சாமானிய சொல்லாடலில் வீடியோ பதிவிடும் ஜிபி முத்து டிக்டாக் செயலியில் வெகுபிரபலம்.


வீட்டில் உட்கார்ந்து கொண்டு டிக்டாக் செயலியில் வீடியோ மேல் வீடியோ போட்டுக் கொண்டிருந்தவரை ஒரு விடியோ காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து. வீட்டை ஒட்டியே மரக்கடை ஒன்றை வைத்துள்ளார். மரக்கடை தொழிலை பகுதி நேரமாகவும், டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதை முழுநேர தொழிலாகவும் கொண்டவர். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.


அதற்காக கமென்ட்களில் திட்டுவதும், அவரது ஐடிக்கு எதிராக டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு புகார் அளிப்பதும் நடக்கிறது. அப்படி ஜி.பி. முத்துவுக்கு எதிராகவும் டிக்டாக்கில் உள்ள பலர் புகார்கள் அளித்து ஐ.டி.யையே பிளாக் செய்யும் சம்பவங்களும் நடந்துள்ளன.

எத்தனை முறை பிளாக் செய்தாலும், கொஞ்சமும் அசராத ஜி.பி.முத்து புது ஐடியைத் தொடங்கி அதில் வீடியோ போடுவதும், ரசிகர்கள் அவரைத் தேடிச்செல்வதும் வாடிக்கை. ஆனால் தற்போது ஜி.பி.முத்துவின் ஒரு வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை நாடியுள்ளனர். தனது இன மக்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்டதாக, வனவேங்கைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உலகநாதன் ஜி.பி.முத்துவுக்கு எதிராக தூத்துக்குடி போலீசில் புகார் அளித்தார்.மேலும், ஜி.பி. முத்துவுக்கு எதிராக, பல மாவட்டங்களில் வனவேங்கைகள் கட்சியினர் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து புகார் அளிப்பவர்களுக்கு எதிராக கடும் சொற்களால் டிக்டாக்கில் வீடியோ போட்டு வந்தார்.இந்த நிலையில், தனது மகள் கோபித்துக் கொண்டது குறித்து ஜி.பி. முத்து வெளியிட்ட வீடியோ எரியும் சர்ச்சைத் தீயில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்தது.மீண்டும் மீண்டும் தனது இன மக்களுக்கு எதிராக வீடியோ வெளியிடும் ஜி.பி.முத்துவிற்கு எதிராக முதலமைச்சரின் தனிப்பிரிவில் உலகநாதன் புகார் அளித்தார்முதல்வர் தனிப்பிரிவிலிருந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அப்புகார் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில், உடன்குடியில் இருந்த ஜி.பி.முத்துவை புதன்கிழமை குலசேகரபட்டினம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.


விசாரணை முடிவில் "நான் இனி டிக் டாக் வீடியோ போட மாட்டேன்" என்று கடிதம் எழுதி கொடுத்து, தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.

   Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.