500 ரூபாய்க்கு ஈ பாஸ் விற்றவர்கள் கைது!

500 ரூபாய்க்கு ஈ பாஸ் விற்றவர்கள் கைது! 
கொரோனா பரவி வருவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமானால் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் இ-பாஸ் பெற்று, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்கின்றனர். இருப்பினும் சிலருக்கு இ-பாஸ் கிடைப்பதில்லை. 

இந்நிலையில் கடலூரில் அரை மணி நேரத்தில் இ-பாஸ் பெற்று தரப்படும். அதற்காக சேவை கட்டணமாக ரூ.500 வசூலித்து வருவதாக டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் பேசியதாக ஆடியோ ஒன்று வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார், அந்த ஆடியோ வெளியிட்ட நபர் பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் சாவடியை சேர்ந்த முனுசாமி மகன் ராஜாராம் (வயது 38) என்றும், அவர் டிரைவராக இருப்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற ஆவணங்களை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அசல் இ-பாஸ் எடுத்து கொடுத்ததோடு, அந்த சான்றிதழ்களை போலியாக வைத்து மற்றவர்களுக்கும் இ-பாஸ் பெற்று கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது. 

இவ்வாறாக மொத்தம் 30 இ-பாஸ் பெற்றுள்ளார். அரசுக்கு எதிராக அவர் இ-பாஸ் வாங்கி கொடுத்து, அதற்கு தலா ரூ.500 வீதம் கட்டணமாக பெற்றதும் தெரிய வந்தது.

அவருக்கு உடந்தையாக அவரது உறவினர் சக்கரவர்த்தி மகன் மணிகண்டன் (36) என்பவர் செயல்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.