ஏப்ரல் 2021

கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்


பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், மாரடைப்பால் காலமானார். காதல் தேசம், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கே.வி.ஆனந்த், கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநர் ஆனார்.

அதன் பிறகு அயன், மாற்றான், கோ, கவண், காப்பான், அநேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அவர், சிறந்த ஒளிப்பதிவிற்காக தேசிய அளவில் விருது பெற்றுள்ளார்.

54 வயதான கே.வி.ஆனந்த், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Breaking the karate world record! 

Chennai:

The All India Zen Isshinryu Karate Association Have Conducted A Karate World Record On 24th April At 3.57 Pm In YMCA, Nandanam, Chennai. The Accomplished Record - 1222 Bikes Went Over The Chest Of Master Pradeep Babu (23) in 37 Minutes And 16 Seconds With Blessings Of His Master, Hanshi Geribala, his Father C. Murali and Mother M. Indira.

It Was His Master's Desire To Make One Of His Students'  Break His Previous World Record ( 1001 Bikes Went Over His Chest), Which Was Created In 2009 Held At NSG Hub, Ashok Nagar, Chennai.

Master Pradeep Babu Is A Rashtrapati Scout Awardee, Received The Award From The Hon. President Of India, Mr. Pranab Mukherjee In The Year 2015 In Rashtrapati Bhavan, New Delhi.( Highest National Award In Scout Section) With The Constant Support Of His Scout Master And The South West Chennai District Officials. 


He Started Teaching Karate To His Students At The Age Of 12. He Is In 5th Dan (Designee) Black Belt Now And Teaches To More Than 200 Students In Chennai. 

He Is On The Journey To Achieve His Ambition Of Serving India. 

He Completed His Schooling In Krishnaswamy Matriculation School, Kk Nagar & Graduation In Loyola College, Chennai. He Also Excelled In Athletics.


இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 18-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதன்படி கடந்த 5 நாட்களாக இரவு 10 மணியளவில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் திறக்கப்படவில்லை. எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலேயே மீன் மார்க்கெட்டுகளிலும், இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதும். இன்று இந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் மீன் மார்க்கெட் பகுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


பெரிய ஜவுளிக்கடைகள் மற்றும் சிறிய கடைகள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் துணி எடுப்பதற்கு அலை மோதுவார்கள். இதனால் இந்த கடைகள் அனைத்தும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கே திறக்கப்பட்டு இருக்கும். இன்று முழு ஊரடங்கால் ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன.

இதேபோன்று செல்போன் கடைகள், ஹார்டுவேர்ஸ் மற்றும் பெயிண்டு கடைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டு இருந்தன.

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மளிகைக்கடைகள் மற்றும் டீக்கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. மளிகை மற்றும் டீக்கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் எப்போதும் வியாபாரம் சூடுபிடிக்கும். இன்று கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அந்த காட்சிகளை காண முடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், செங்குன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக பலர் கடைகளை போட்டு வியாபாரம் செய்வது வழக்கம்.

இந்த கடைகளில் பூக்கள், காய்கறிகள், மீன், கருவாடு உள்ளிட்ட உணவு வகைகளும் அதிகளவில் விற்பனையாகும். இன்று அது போன்று எந்த கடைகளையும் காண முடியவில்லை.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான இடங்களில் வாரச்சந்தைகள் நடைபெறுவது உண்டு. ஆடு, நாட்டுக்கோழி வியாபாரம் அந்த சந்தைகளில் களை கட்டும். செங்குன்றம் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாலையோரமாக சேவல், கோழிகளை பலர் விற்பனைக்காக வைத்திருப்பார்கள்.


நாட்டுக்கோழி முட்டை வியாபாரமும் அதிகமாக நடைபெறும். இன்று இது போன்ற வியாபாரிகளை காணவில்லை.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு கூடுவார்கள். தியேட்டர்களுடன் கூடிய மால்களில் திருவிழா போன்று கூட்டம் காணப்படும்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கழிக்க குடும்பத்தோடு மால்களுக்கு செல்வார்கள். தியேட்டர்களில் படம் பார்த்து விட்டு அங்குள்ள ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவது வழக்கம். இன்று இந்த மால்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

சென்னையில் அமைந்தகரை ஸ்கைவாக், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா, வேளச்சேரி பீனிக்ஸ் மால் உள்ளிட்ட அனைத்து மால்களும் இன்று மூடப்பட்டு இருந்தது. காவலர்கள் மட்டுமே இந்த மால்களில் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இது தவிர சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான இறைச்சி, மீன் உள்ளிட்டவைகளை நேற்றே வாங்கி வைத்துக் கொண்ட பொதுமக்கள் இன்று வெளியில் வரவில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு பயந்து மக்கள் வெளியில் வரவில்லை.

முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பால் வண்டிகள், மருத்துவமனை வாகனங்கள், அமரர் ஊர்திகள் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் வழக்கம் போல் செயல்பட்டன.


மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவை எப்போதும் போல செயல்பட்டன. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் மாநிலம் முழுவதும் திருமண நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற்றன.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 500 வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்தனர்.

சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கை மீறி வெளியில் வந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் அதில் வந்தவர்களை எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்தனர். அப்போது உரிய காரணங்களை தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் அழைப்பிதழ்களை காட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். தேவையில்லாமல் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



Eight Fishermen Saved at Sea by Indian Coast Guard off Karaikal


Indian Coast Guard Ship (ICGS) Ameya patrolling off Karaikal received a distress message on radio from a fishing boat stranded approximately 15 nautical miles from coast due to machinery breakdown. Sensing the urgency of distress onboard fishing boat, which was drifting away from the shore due to weather, the ICG ship towed the boat to safety and handed over to the Fisheries authority off Nagapattinam.


During this rescue mission, the officials of Indian Coast Guard Station Karaikal were in constant communication with the boat owner and fisheries authorities. The incident once again highlights the disadvantages of fishing boats venturing out alone. The fishermen are therefore, advised to undertake fishing in groups adhering to safe practices at sea and carry adequate lifesaving appliances and communication equipment onboard.


 WORLD EARTH DAY CELEBRATION


Chennai:

IQAC, Eco Club & NSS of Sri Kanyaka Parameswari Arts and Science College for Women Celebrated World Earth Day by initiates Vasudhaika Kutumbam Project “Breathe n Green” in the college campus. Sri. C. LAWRENCE, M.E., M.B.A., EXECUTIVE ENGINEER, ZONE V, GREATER CHENNAI CHENNAI was the Chief Guest of the day. 

Sri Guggilam Ramesh (Hony Correspondent), Dr. T. Mohanashree (Principal), Dr. P. B. Vaneetha (Vice Principal), Dr. K. Nappinai (Academic Vice Principal), Mrs. A. Durga Devi (Eco Club Secretary), Mrs. V. Bhanu (NSS Secretary) were the dignitaries present on the occasion. 

We planted samplings in the college campus and also campus nearby area in the objectives to bring back life, restore the local ecology by nurturing the native species, spread awareness about global warming and environmental protection particularly among the student community.




தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். மேட்டுக்குப்பாம் மின்மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
78 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்களின் மோதல்!




கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் இலட்சக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்த ரியால்டி ஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம், இந்த ஞாயிறு அன்று பொழுதுபோக்கின் உச்சத்தை எட்டப்போகிறது.


திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்கள் நேருக்கு நேர் மோதும் சுவாரஸ்யம் நிறைந்த போட்டியாக இந்நிகழ்ச்சி இருக்கும். நடிகர்களின் வேடிக்கையும், கேளிக்கையும் நிறைந்த பேச்சுக்களும், பரபரப்பான விளையாட்டுக்களும் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவிருப்பதால் வரும் ஞாயிறு 2021 ஏப்ரல் 18 இரவு 7:00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK) நிகழ்ச்சியை நீங்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாது என்பதற்கான இரு காரணங்கள் இதோ.

 

நட்சத்திரங்களின் அதிரடி கொண்டாட்டம்: CSK-ன் இவ்வார எபிசோட், தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வளர்ந்துவரும் உபாசனா ஆர்சி, ரிஷா ஜேகப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா மற்றும் சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் அவர்களது பல்வேறு ஃபெர்பார்மன்ஸ் வழியாக பார்வையாளர்களை பரவசப்படுத்தவிருக்கின்றனர். 


அதுமட்டுமல்ல, கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் நெடுந்தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா ஆகியோருடன் நட்புறவுடன்கூடிய மோதலில் திரைப்பட நட்சத்திரங்கள் ஈடுபடவிருக்கின்றனர். சுவாரஸ்யமான இந்த போட்டியினால் இந்த வாரஇறுதி நாளில் ஒளிபரப்பாகும் CSK இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பது நிச்சயம்.

 

மாபெரும் விருந்து: VJ அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த வாரத்தின் CSK எபிசோட், பல்வேறு விளையாட்டுக்களின் அற்புதமான கலவையாக இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தின் அறிவையும் மற்றும் சமயோஜித திறனையும் பரிசோதிப்பதாக இந்த விளையாட்டுகள் இருக்கும். எக்ஸ்பிரஷன்ஸ் சுற்றிலிருந்து மேக்-அப் சுற்று என குதூகலமான போட்டிகள் நிறைந்த இந்நிகழ்ச்சியில் இந்த நட்சத்திரங்களின் இதுவரை அறியப்படாத முகங்களை நகைச்சுவை கலந்து இந்த எபிசோட் வெளிச்சம் போட்டு காட்டும்.

 

கேளிக்கையும், வேடிக்கையும் நிறைந்த கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை 2021 ஏப்ரல் 18 ஞாயிறு இரவு 7:00 மணிக்கு கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாது டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. 




இயக்குநர் வெற்றிமாறனின் புதிய முயற்சி!


சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வெற்றிமாறனின் புதிய முயற்சி!!


IIFC -International Institute of Film and Culture - சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்.இயக்குநர் வெற்றிமாறன் முன்னெடுப்பில் தொடங்கியது.

IIFC இன்  சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100 % மானியங்களுடன் முழுமையான உணவு ,குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் .


THE ELEGIBILITY CRITERIA:

● கல்வித் தகுதி: ஏதேனும் (ஊடகமல்லாத) பட்டம் பெற்றவர்கள்.

● வயது எல்லை: 21 - 25

● புவி-கலாச்சார பின்னணி: தமிழ் பேசும் + தமிழ் நாட்டிலிருந்து (முன்னுரிமை ஒரு மாவட்டத்திற்கு ஒன்று)

● சமூக-பொருளாதார விருப்பம்: சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்; முதல் தலைமுறை பட்டதாரிகள் .

❖100% மானியங்களுக்கான ஐந்து-படி தேர்வு:

ஆரம்ப ஆய்வு, எழுதப்பட்ட சோதனை, கல்வி நேர்காணல், தொழில்முறை நேர்காணல் மற்றும் வீட்டு வருகை
❖மொத்த உட்கொள்ளல்: 35-40 மாணவர்கள் (ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர்)



பா.ரஞ்சித் இயக்கிய "ரைட்டர்"  



இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில்  பிராங்ளின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும்  ரைட்டர்.  இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்ப்பையும் பெற்றது.


தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித்  தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார். இதில் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் ,  கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி புரொடக்சன்ஸ்  தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல்துறையில் பணிபுறியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும்  ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார். ஹரிகிருஷ்ணன் , இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்

வழக்கமான சமுத்திரக்கனியை இந்தப்படத்தில் பார்க்கமுடியாது, இது அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் பிராங்ளின். இன்று ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஒளிப்பதிவு பிரதீப் காளிராஜா 

கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
யுகபாரதி, முத்துவேல் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்

எடிட்டிங் - மணிகண்டன் சிவக்குமார்
சண்டைப்பயிற்சி - சுதேஷ்
கலை - ராஜா
நடனம் - சதீஷ்

தயாரிப்பு - 
பா.இரஞ்சித்,
அபையானந்த் சிங்,
பியூஸ் சிங்,
அதிதி ஆனந்த்.

கொரோனா தீவிரம்: மக்கள் நிலை?!  


நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவியது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 717 பேர் ஆண்கள், 3 லட்சத்து 75 ஆயிரத்து 376 பேர் பெண்கள், 36 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கூடவே 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் தினமும் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த மாதம் முதல் நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துவிட்டது. 

எனவே தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டார். இதற்காக மத்திய அரசு சார்பில் தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி போட வைப்பதே இந்த தடுப்பூசி திருவிழாவின் நோக்கம் ஆகும்.

அதன்படி இந்தியாவில் 4 நாள் தடுப்பூசி திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். மத்திய அரசின் தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்தநிலையில் தடுப்பூசி திருவிழாவை நடத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நடத்தி அதிகம் பேருக்கு தடுப்பூசி போட வைக்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்தது.

அதன்படி தமிழகத்தில் இன்று முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடக்கிறது. இன்று காலை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. இந்த தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.


தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1900 மினி கிளினிக்குகள் மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த இடங்களில் இருக்கும் கட்டமைப்பின் படி தினமும் சுமார் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். ஆனால் தற்போது 1.63 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். எனவே தடுப்பூசி திருவிழாவுக்கென்று தனியாக மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. தற்போது போடப்பட்டு வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களிலேயே தடுப்பூசி திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி திருவிழா தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது.

தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள். எனவே தடுப்பூசி திருவிழாவில் தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். தடுப்பூசி திருவிழா முடிந்த பிறகும் தினமும் 2 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டு 4-வது வாரத்துக்குள் 2-வது தவணை போட வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை போட்ட பிறகு 8 வாரங்களுக்குள் 2-வது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கட்டாயம் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.

18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையன்!


சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரைச் சேர்ந்தவர் கீதா (வயது 24). தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள இவர், தனது வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் சிலை முன்பு நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தார்.

 அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரை கண்டதும் இருசக்கர வாகனத்தை திருப்பினர். ஒருவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருக்க, பின்னால் அமர்ந்து இருந்தவர் கீழே இறங்கி வந்து கீதா கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றான். 

இதனால் சுதாரித்துக்கொண்ட கீதா, கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது சாலையோரம் தவறி விழுந்தார். உடனே கொள்ளையன் அவர் கழுத்தில் கிடந்த சங்கிலியை பிடித்து இழுத்தான். ஆனால் கீதா, சங்கிலியை கையால் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டப்படி கொள்ளையனிடம் போராடினார்.

ஆனாலும் கொள்ளையன் கீதாவை தரதரவென சாலையில் இழுத்து வந்து சங்கிலியை பறிக்க முயன்றான். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், இதனை வேடிக்கை பார்த்தனர். 

யாரும் கொள்ளையனை தடுக்க முயற்சி செய்யவில்லை. இதற்கிடையில் அக்கம் பக்கத்தினர் சிலர் ஓடிவந்ததால் சங்கிலியை பறிக்க முடியாமல் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். இதனால் 11 பவுன் தாலி சங்கிலி தப்பியது. கொள்ளையனிடம் போராடியதில் கீதாவுக்கு கை, காலில் லேசான காயங்கள் ஏற்பட்டது.

இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.


மனித மூளையில் சிப் பொருத்தும் தொழில்நுட்பம்!


அதிநவீன மின்சார கார்களை தயாரிக்கும் டெஸ்லா, செயற்கைக்கோள்களை இலக்கிற்கு அனுப்பி விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதுமையான நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனம் நியூராலிங்க். 

மனிதனின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி அதன் மூலம் மனிதனையும் இயந்திரங்களையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதே நியூராலிங்கின் நோக்கம்.


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், விரல்களை கொண்டு ஸ்மார்ட்ஃபோனை இயக்குபவரை விட வேகமாக ஸ்மார்ட்ஃபோனை இயக்க வைக்க நியூராலிங்கின் முதல் தயாரிப்பு உதவும் என ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட பரபரவென பற்றிக் கொண்டது அறிவியல் உலகம்.

அப்படி என்ன தயாரிப்பு அது? என்று ஆவலோடு கேட்போருக்கு நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் விடை இருக்கிறது. பேஜர் என்ற குரங்கு ஒன்று வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த நியூராலிங்க் நிறுவனம் தயாரித்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.

வீடியோ கேமில் வரும் பந்தை ஆரஞ்சு நிறப் பெட்டிக்குள் ஒவ்வொரு முறை சேர்க்கும்போதும் குரங்கிற்கு ஒரு குழாய் மூலம் வாழைப்பழக் கூழ் கொடுக்கப்படுகிறது. அதனை சுவைத்துக் கொண்டே குரங்கு ஜாய்ஸ்டிக்கை அசைத்து விளையாட்டை தொடர்கிறது. ஜாய்ஸ்டிக் மூலம் பந்தை சரியாக ஆரஞ்சுப் பெட்டியில் சேர்க்கும் போது குரங்கின் மூளையில் உருவாகும் அலைகள், சிப் மூலமாக கணிணிக்கு கடத்தப்படுகின்றன.

ஜாய் ஸ்டிக்கை அசைக்க குரங்கின் மூளை இட்ட கட்டளையை ஒரு கணிணி ப்ரோகிராமாக மாற்றி சிப்பில் பதிய வைக்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போது ஜாய் ஸ்டிக்கை அசைக்க வேண்டும் என்று குரங்கு நினைத்தவுடன் ஜாய் ஸ்டிக் இல்லாமலே வீடியோ கேம் விளையாட்டு வேகமாக நடக்கிறது.

குரங்கின் மூளை இட்ட கட்டளை வயர்லெஸ் தொடர்பு மூலமாக நேரடியாக கணிணிக்கு கடத்தப்படுவதால் விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது. சரி இதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை என்று கேட்டால், எலான் மஸ்க் சொன்ன அதே விளக்கம் தான் பதில். 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி விட்டால் அவர் நினைத்தவுடன் ஸ்மார்ட்ஃபோன் இயங்கத் தொடங்கும். இதேபோல செயற்கை கைகள் பொருத்தப்பட்ட ஒருவரின் மூளையுடன் அவரது கையை இணைத்து விட்டால் மூளை சொல்லும் கட்டளைக்கு ஏற்ப கை தானாக இயங்கும்.

இவையெல்லாம் தாண்டி மனித நினைவுகளை காப்பி எடுத்து வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் ஓட்டிப் பார்க்கவும் முடியும் என்றெல்லாம் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள் நியூராலிங்க் குழுவினர். 

கண்ணுக்குத் தெரியாத ஒற்றை சிப்பின் மூலம் மனித வாழ்க்கை ஆளப்படும் காலம் விரைவில் வரலாம் என முன்னோட்டம் காட்டியிருக்கிறது நியூராலிங்கின் புதிய தயாரிப்பு.




இனி வரக்கூடிய நாட்களிலும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்!


கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்து அதற்கான உத்தரவுகளையும் வெளியிட்டுள்ளது.

அதில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பஸ், சென்னையில் இயங்கும் மாநகர பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும், பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவித்து இருந்தது. இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
 
                                 போக்குவரத்து கழகம் ஏற்பாடு
 
அதன்படி, சென்னையில் இயங்கக்ககூடிய மாநகர பஸ்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் உள்பட மற்ற பஸ்களிலும் பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

இருக்கை அனைத்தும் நிரம்பி, நின்றபடி பயணிக்க பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த பயணிகள் அதற்கு அடுத்தபடியாக வரும் பஸ்களில் ஏறி பயணம் சென்றனர்.
 
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தினமும் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அந்தவகையில் காலை, மாலை நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில் இந்த கூடுதல் பஸ்களை இயக்கி, பஸ்களில் நின்று கொண்டு பயணிகள் பயணம் செய்யாத படி வழிவகைகளை செய்து இருந்தனர்.
 
பஸ்களில் இப்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை இனி வரக்கூடிய நாட்களிலும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த நடைமுறைகளை ஓரிரு நாட்கள் மட்டும் பின்பற்றி, பின்னர் அதை காற்றில் பறக்க விடுவது மேலும் கொரோனா பரவலை அதிகரிக்கத்தான் செய்யும்.
 
                                       சானிடைசர் பாட்டில்
 
இவ்வளவு நடவடிக்கைகள் அரசு எடுத்தாலும், பொது மக்கள் முக கவசம் அணிவது மிக அவசியம் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அப்படி தெரிவித்தாலும், பொதுமக்கள் முக கவசம் அணிவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டிதான் வருகின்றனர். பஸ்களில் ஏறி பயணிக்கும் பயணிகள் கடமைக்கு முக கவசம் அணிவது போல, நாடிப்பகுதி வரை மட்டும் முக கவசத்தை அணிந்து பயணிக்கின்றனர்.
 
மேலும் கொரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு, பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட போது, ஒவ்வொரு பஸ்களிலும் பயணிகள் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்காக சானிடைசர் பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த சானிடைசர் பாட்டில் பெரும்பாலான பஸ்களில் இல்லை. 

அப்படி இருந்தாலும், அது பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இல்லை. இதை சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வழிபாட்டுத்தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும், அரசு பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

13-ந் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மெரினா செல்ல தடை:
 
இந்தநிலையில் புதிய கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 11-ந் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப் படுகிறது.
 
இரவு 10 மணி வரை அனுமதி:
 
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.வழிபாட்டு தலங்கள் அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளை பின்பற்றி இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்க அனுமதிக்கப் படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
 
கூடுதல் காட்சிக்கு அனுமதி:
 
புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதிக்கப்படுகிறது.அனைத்து காட்சிகளின் போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ‘சர்பத்’ திரைப்படம்


அறிமுக இயக்குனர் பிரபாகரனின் இயக்கத்தில் உருவாகி அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் திரைப்படமான சர்பத் திரைப்படத்தின் நேரடி சேட்டிலைட் ப்ரீமியர் நிகழ்ச்சியை உங்கள் தொலைக்காட்சி திரைகளுக்கு, தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ் கொண்டு வருகிறது.  

புகழ்பெற்ற நடிகர் கதிர், பிரபல நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் திரைக்கு புதுவரவான ரகசியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.  சிறப்பான இந்த நடிகர் பட்டாளம் மட்டுமின்றி, திறமை வாய்ந்த அஜீஸ் அசோக் இசையமைப்பாளராக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். 

டெய்ரி டே ஐஸ்க்ரீம் மற்றும் கேட்பரி பெர்க்  ஆகியோரின் கூட்டுவகிப்பில் ஒளிபரப்பாகும் சர்பத் திரைப்படத்தின் முதல் அறிமுக ஒளிபரப்பை 2021 ஏப்ரல் 11 அன்று மாலை 4.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கும் கலர்ஸ் தமிழில் கண்டு ரசிக்க தயாராகுங்கள்.

திண்டுக்கல் நகரை பின்புலமாகக் கொண்டு ஒரு ஐடி தொழில்துறை பணியாளரின் வாழ்க்கையை நடிகர் கதிர் சித்தரிக்கின்ற ஒரு குடும்ப திரைப்படமாக சர்பத் உருவாக்கப்பட்டுள்ளது.  தனது அண்ணனின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு செல்லும்போதுதான் திருமண நிகழ்வு இரத்து செய்யப்பட்டதை அவர் அறிய நேரிடுகிறது. 

தனது அண்ணன் திருமணம் செய்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்த அதே இளம்பெண்ணுடன் கதிர் காதலில் விழும்போது, திரைப்படத்தின் கதை பரப்பரப்பான திருப்பத்தைக் காண்கிறது.  நண்பனாக வரும் சூரியின் உதவியோடு இந்த சிக்கலான சூழலை கதிர் எப்படி சமாளிக்கிறார் என்பது சுவாரஸ்யமானது.  காதல், நட்பு, சகோதரத்துவ உணர்வு மற்றும் சிரிப்பு என பல்வேறு உணர்வுகளின் நேர்த்தியான தொகுப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் குடும்பம் முழுவதும் சேர்ந்து அமர்ந்து ரசிக்கக்கூடிய சிறப்பான பொழுதுபோக்குப் படமாக இருக்கும். 

 

கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன் திரைப்படத்தின் பிரீமியர் ஒளிபரப்பு குறித்து பேசுகையில்:


 “தரமான நிகழ்ச்சிகளைக் கொண்டு எமது பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க வேண்டும் என்பதே கலர்ஸ் தமிழில் எப்போதும் எங்களது நோக்கமாக இருந்து வருகிறது.  இதை இன்னும் அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்காக, எங்களது நிகழ்ச்சி அட்டவணையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக திரைப்படங்களை கொண்டு வருவது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.  ஒரு மாதத்தின் சிறந்த திரைப்படம் என்ற நிகழ்ச்சியை இதற்காக நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.  இதன்மூலம் எமது அலைவரிசையில் புத்தம்புதிய அல்லது சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம்.  இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, முதலாவதாக கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மட்டும் பிரத்யேகமாக ஒரு நேரடி சேட்டிலைட் ப்ரீமியர் ஒளிபரப்பாக சர்பத் திரைப்படத்தை நாங்கள் வழங்குகிறோம்.  குடும்பம் முழுவதும் சேர்ந்து ரசிக்கக்கூடிய  ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கிறது,” என்று கூறினார்.

 

இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் கதிர் இத்திரைப்படம் குறித்து பேசுகையில்:


 “சர்பத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்றிருப்பது குறித்து நிச்சயமாகவே நான் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்டிருக்கிறேன்.  முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை சித்தரிக்க முதன்முறையாக இத்திரைப்படத்தில் நான் முயற்சி செய்திருப்பதே இதற்குக் காரணம்.  சமயத்திற்கு ஏற்றவாறு துணுக்குகளை வாரி வீசும் நகைச்சுவை உணர்வுமிக்க சூரி மற்றும் திறமைமிக்க நடிகையான ரகசியா ஆகியோரோடு இணைந்து இத்திரைப்படத்தில் பணியாற்றியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது.  அதிக நம்பிக்கையளிக்கும் இயக்குனரான திரு. பிரபாகரன் அவர்களது வழிகாட்டலில் எனது திறமைகளை இதில் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.  தொலைக்காட்சி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகின்ற தற்போதைய போக்கினையொட்டி, சர்பத் திரைப்படமும் கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் நேரடி சேட்டிலைட் ப்ரீமியராக ஒளிபரப்பப்படுவதில் எனக்கு மகிழ்ச்சியே.  இத்திரைப்படத்தில் மிகவும் அனுபவித்து நான் பணியாற்றியிருக்கிறேன்.  ரசிகர்களும், பார்வையாளர்களும் இத்திரைப்படத்தை ரசித்து அனுபவிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

 

நகைச்சுவை நடிகர் சூரி இத்திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்கையில்:


 “கலர்ஸ் தமிழ் போன்ற ஒரு பிரபல அலைவரிசையில் நேரடி சாட்டிலைட் பிரீமியர் நிகழ்ச்சியாக நான் நடித்திருக்கும் திரைப்படம் சர்பத் ஒளிபரப்பப்படுவது உண்மையிலேயே பெரும் உற்சாகத்தை எனக்கு உருவாக்கியிருக்கிறது.  இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது.  முதன் முறையாக நடிகர் கதிருடன் சேர்ந்து நடித்திருப்பது இன்னும் மிகவும் சிறப்பான  அனுபவமாக இருந்தது.  இத்திரைப்படத்தில் ஆர்வத்தோடு, அனுபவித்து நான் நடித்ததைப்போலவே எனது கதாபாத்திரத்தையும் பார்வையாளர்கள் பெரிதும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

 

இத்திரைப்படம் வெளியாவது குறித்து பேசிய இதன் இயக்குனர் பிரபாகரன்:


“ஒரு திரைப்பட படைப்பாளியாக எனது பயணத்தை தொடங்கியிருப்பதால் சர்பத் எப்போதும் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.  கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் அதன் நேரடி சாட்டிலைட் பிரீமியர் நிகழ்ச்சியாக இலட்சக்கணக்கான பார்வையாளர்களின் விரிவான தளத்தை எனது அறிமுக திரைப்படம் சென்றடையும் என்பதால், நான் பெருமகிழ்ச்சியும், பிரமிப்பும் கொண்டிருக்கிறேன்.  ஒரு குழுவாக, இத்திரைப்படத்தில் கடும் உழைப்பை நாங்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருக்கிறோம்.  இத்திரைப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தங்களை பார்வையாளர்கள் இணைத்து, ஒப்பிட்டுப்பார்க்க இயலும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார். 




ஜெயலலிதா அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு...


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு ஜெயலலிதாவுக்கு ரூ.80 கோடி செலவில் நினைவிடம், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 27-ந்தேதி பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அப்போது அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகள் நிறைவடையவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

எனினும், பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதால், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா நேற்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் நுழைந்த உடன் நேராக கண்ணில் படும்படி ஜெயலலிதாவின் ஆளுயர மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிப்பருவம் முதல் ஆட்சியில் இருந்த இறுதி காலம் வரையிலான ஜெயலலிதாவின் கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர, தேசிய தலைவர்கள் மற்றும் உலக தலைவர்களை சந்தித்தபோது உள்ள ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், ஜெயலலிதாவின் சாதனை மைல் கற்கள் மற்றும் ஜெயலலிதாவுடன் உரையாடல் போன்ற தொடுதிரை அரங்குகளும் உள்ளன. ஆனால், கொரோனா காலம் என்பதால் இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.

இதேபோன்று, அறிவுசார் பூங்காவில், ஜெயலலிதா அரசியலில் செய்த சாதனை திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை பார்த்து செல்கின்றனர். கொரோனா காலம் என்பதால், முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளில் கிருமிநாசினி தெளித்த பிறகே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பொதுமக்கள் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை பார்வையிடலாம்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.