ஜூன் 2024

“இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!





உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். 
தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  "இந்தியன் 2" டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. 
இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இவ்விழாவினில்

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியதாவது… 
'உலக நாயகன் கமல் சார், பிரம்மாண்டத்தின் உச்சம் இயக்குநர் ஷங்கர் சார், ராக்ஸ்டார் அனிருத் மூன்று பேரும் சேர்ந்து, இந்தப்படத்தில் ரணகளப்படுத்தியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கமல் சார், ஷங்கர் சார் இணைந்து, இதற்கு மேல் இப்படி ஒரு பிரமாண்ட படைப்பைத் தர முடியுமா எனத் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி' என்றார்.

நடிகர் சித்தார்த் பேசியதாவது… 
'21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு, என் ஆசான் கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் நன்றி சார். ஒரு புதுமுகமாக என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை விட, இந்த படத்தில் நீங்கள் கொடுத்த பொறுப்பை மிக எளிதாக விட்டு விடமாட்டேன். அதற்கான உழைப்பை தந்துள்ளேன் என நம்புகிறேன். கடந்த 20 வருடங்களில் நான் நடித்த பாத்திரங்களில் என்னுடைய பர்சனல் முகம், இந்த படத்தில் நிறைய இருக்கிறது. எனக்குமே இது பர்சனல் ஜர்னியாக இருந்தது. அற்புதமான அனுபவம். இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு நன்றி சார். உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகன். அவர் எனக்கு எப்போதும் ஆசானாகவே இருந்திருக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் கேமரா முன்பு நிற்கிறேனோ, அப்போது மேலே இருந்து, அவருடைய உழைப்பும், நடிப்பும் தான் என்னை வழிநடத்தியது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்குமோ? அதுதான் இந்தியன் 2.  இந்தியன் தாத்தா வறார் கதற விடப் போகிறார்' என்றார்.

இயக்குநர் ஷங்கர் பேசியதாவது...
'பொதுவாக எப்போதும் என்னுடைய படங்கள் இது இப்படி நடந்தால், எப்படி இருக்கும் என்கிற கான்செப்டில் தான் இருக்கும். இந்தப்படமும் அந்த மாதிரி தான். இப்போதிருக்கும் நாட்டின் சூழ்நிலையில், இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படம். இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அனைவரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்தியன் படத்தைப் பொறுத்தவரை அதன் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தியன் 2 கதை, கொஞ்சம் வெளியே சென்று, இந்தியா முழுக்க, எல்லா மாநிலங்களிலும் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையைப் பொறுத்த வரைக்கும், இதில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியன் தாத்தா தவிர, நிறைய குடும்பங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இந்தியா முழுக்க இருக்கும் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவர்களை இந்தப்படம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் மிகச் சிறப்பாக வர மிக முக்கியக் காரணம் கமல் சார் தான். பார்ட் 1 இல் கூட நாங்கள் அவருக்கு 40 நாள் தான் மேக்கப் போட்டு தான், ஷூட் செய்தோம். ஆனால் இந்தப் படத்தில் 70 நாட்கள் அவர் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு வந்து, மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு ரெடியாக வேண்டும், சாப்பிட முடியாது தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். மிகக் கஷ்டப்பட்டு, மிக அர்ப்பணிப்போடு இருப்பார். அவர் உழைப்பைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருக்கும். ஷூட்டிங்கே முடிந்தாலும் அவர்தான் கடைசியாகப் போவார். அந்த மேக்கப் கலைப்பதற்கு 1 மணி நேரமாகும். முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது ஒரு சிலிர்ப்பு வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அவரை ஷீட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாக தான் வாழ்ந்திருக்கிறார். இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். ஒரு சீன் 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கி கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டு நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாது ஆனால் கமல் சார் அதைச் செய்துள்ளார். இன்னும் பல காட்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம். கமல் சார் உங்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. அனிருத் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக மியூசிக் போட்டுள்ளார். ஒரு டியூன் அனுப்புவார் 80 % ஓகே என்பேன். ஆனால் நீங்கள் 100 % சொல்லும் வரை போட்டுக் கொண்டே  இருப்பேன் என்பார். என்னவிதமான சிச்சுவேசன் தந்தாலும் மிரட்ட கூடியவர், அனிருத்துக்கு வாழ்த்துக்கள்.  விவேக் சார் அவரை திரையில் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. மனோ பாலாவும் அழகாக நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவில் வர்மம் செய்து ரவிவர்மம் காட்டியுள்ளார் ரவிவர்மன். குணால் சின்ன சின்ன சவுண்டில் கூட அவ்வளவு உழைத்திருக்கிறார். இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.  சுபாஸ்கரன் சார் ரெட் ஜெயன்ட் மூவிஸ், நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படத்தை சப்போர்ட் செய்து பெரிய வெற்றி பெறச்செய்தீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும்' என்றார்.

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது...
'உயிரே உறவே வணக்கம்.  உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கும், அதை நான் இருந்து, எனக்கும் வாய்ப்பளித்ததற்கும் நன்றி. முக்கியமாக இந்திய 2 எடுப்பதற்குக் கருவைத் தந்துகொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனெனில் கரப்சன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது. இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக். நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது. ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முரண் கருத்து எப்போதும் மேடையில் இருக்க வேண்டும். ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன் 2  மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம் அதான் இந்தியன் 3. இந்தப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல, இயற்கையும் கொரோனா நோயும் தான் காரணம். அதையெல்லாம் தாண்டி இப்படத்தை எடுக்கத் துணையாக நின்ற லைகாவிற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் நன்றி. தம்பி உதயநிதி அவர் எங்கள் ரசிகனாக இருந்ததால், இதை எடுக்கத் துணிந்தார். அவருக்கும் நன்றி. சித்தார்த் இங்கு மேடையில் மட்டுமல்ல, என்னிடமும் அப்படித்தான் பேசுவார். அன்பா, நடிப்பா எனத்தோன்றும், அவ்வளவு பணிவாக இருப்பார்.  நல்ல மனசுக்காரார். இந்தப் படம் பல சாதனைகள் படைக்கும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்' என்றார்.

பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்தியன் 2, அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2  எனவும் மற்றும்  தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும்  இப்படம் வெளியிடப்படுகிறது. 

நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா.  


இயக்குநர்: ஷங்கர்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு இயக்குனர்: ரவிவர்மன் 
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.முத்துராஜ் 
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத் 
வசனம் : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார்
ஆக்‌ஷன் அன்பறிவ் - ரம்ஜான் புல்லட் - அன்ல் அரசு - பீட்டர் ஹெயின் - ஸ்டண்ட் சில்வா - தியாகராஜன்
VFX மேற்பார்வையாளர்: வி ஸ்ரீனிவாஸ் மோகன்
நடன இயக்குனர் போஸ்கோ-சீசர் - பாபா பாஸ்கர்  
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன் 
மேக்கப் - வான்ஸ் ஹார்ட்வெல் - பட்டணம் ரஷீத் - ஏ.ஆர். அப்துல் ரசாக் 
ஆடை வடிவமைப்பு :  ராக்கி - கவின் மிகுல் - அமிர்த ராம் - எஸ் பி சதீசன் - பல்லவி சிங் - வி.சாய்
DI: ரெட்சில்லிஸ் 
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா 
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
நிர்வாக தயாரிப்பாளர் : சுந்தர் ராஜ்
ஜி.கே.எம். தமிழ் குமரன் – மு. செண்பகமூர்த்தி
தயாரிப்பு: சுபாஸ்கரன்

18th Mumbai International Film Festival!




While the 18th Mumbai International Film Festival was held in Mumbai (June 15th to 21st), its Chennai Edition was organised by N. F.D. C.(National Film Development Corporation) in Tagore Film Centre , Chennai which showcased several Documentaries, Short Fiction and Animation Movies from morning till evening.

The Festival was flagged off on Saturday, 15th June with Billy and Molly: An Otter Love Story from the USA, directed by Charlie ,Hamilton -James.

18th June was earmarked for Red Carpet which was attended by dignitaries as Sri. Annadurai, Additional Director , P. I. B. (Press Information Bureau), E. Thangaraj , Director of CIFF(Chennai International Film Festival), Actor/Director, Vijay Aadhiraj and Actor G. M. Kumar.




Rohini Gauthaman, Head, N. F. D. C., Chennai , Thembavani and Nidhi Dhanamithran, Deputy Managers, were also present on the occasion.

Cineasates, film buffs, college students and a vast multitude of film lovers at large, watched the films following which they were seen discussing and deliberating on the content, directorial acumen and other technical aspects related to the films that were screened.

Finally, the curtains were downed on the 21st evening. We can hopefully expect more of many good films, next year!

Thanks to NFDC...

'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு



Chennai:

'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் - நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ விஷ்ணு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், ''எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படக் குழுவினருக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. எம் சினிமா புரொடக்ஷன் எனும் பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி, முதல் தயாரிப்பாக 'லாந்தர்' திரைப்படத்தை தயாரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் ஜூன் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.


படத்தின் இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன் பேசுகையில், ''சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். மாணவர்கள் முன்னிலையில் என்னை மேடையேற்றி பாடுமாறு ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் என்னால் பாட முடியவில்லை.‌ அப்போது அந்த ஆசிரியர், 'இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நீ நன்றாக பாடுவாய்' என ஊக்கமளித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் எனக்கு அது மிகப் பெரிய தோல்வியாக மனதில் பட்டது. மேடை ஏறுவதற்கு முதல் நாள் முழுவதும் பயிற்சி அளித்தார்கள். மேடை ஏறி ஒரு வரியை கூட பாடாமல் இறங்கி விட்டேன்.‌ இதனால் எனக்கும், இசைக்கும் தொடர்பே இல்லை என நினைத்து விட்டேன். 


சிறிது நாள் கழித்து நான் விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு ஒருவர் பழைய ஹார்மோனிய இசைக்கருவியை இசைத்துக்கொண்டிருந்தார். நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து இசைக்கிறாயா என கேட்டார்.  இல்லை எனக்கும், இசைக்கும் வெகு தூரம் என்று சொல்லிவிட்டு, அவர் வாசிப்பதை தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன். அவர் சிறிது நேரம் வாசித்து விட்டு வெளியே சென்று விட்டார்.‌ அப்போது ஹார்மோனியத்தை வாசித்துப் பார்க்கலாமே என வாசிக்க தொடங்கினேன். அருகில் இருக்கும் ஆலயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பக்தி பாடலுக்கு ஏற்ப என்னுடைய கைவிரல்கள் தானாகவே ஹார்மோனியத்தில் வாசிக்கத் தொடங்கின. ஒரு புள்ளியில் தான் நான் அதனை கவனித்தேன், எனக்கும் இசை வருமென்று உணர்ந்தேன்.‌ பாடல்களைக் கேட்டு வாசிக்க முடியும் என நம்பினேன். அப்போதுதான் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. என்னுடைய பெற்றோர்கள், ‘இசையை கற்றுக்கொள். ஆனால் ஒருபோதும் படிப்பை கைவிடாதே’ என்றனர்.


கல்லூரி படிப்பை நிறைவு செய்தவுடன், இசையில் ஏதாவது சாதிக்கலாம் என நினைத்தேன். அப்போதுதான் பாடலாசிரியர் தேவாவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. இருவரும் இணைந்து பாடல்களை உருவாக்கத் தொடங்கினோம். பிறகு திரைப்பட இயக்குநர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க தொடங்கினோம். 


ஒரு நாள் 'ராட்சசன்' பட வெளியீட்டின் போது இயக்குநர் ஷாஜி சலீமை சந்தித்தோம். அவரிடம் வாய்ப்பு கேட்டபோது, முதலில் எங்களது பாடல்களை கேட்டார். ஒரு பாடலை திரும்பத் திரும்பக் கேட்டார் அப்போது 'இந்த இடம் நன்றாக இருக்கிறது. இந்த வரி நன்றாக இருக்கிறது' என தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருந்தார். ஒரு கலைஞருக்கு பாராட்டு தான் சிறப்பாக இயங்க வைப்பதற்கான எனர்ஜி. 

அதன் பிறகு நிறைய பாடல்களை நானும், தேவாவும் இணைந்து உருவாக்கினோம். எல்லா பாடல்களையும் இயக்குநர் ஷாஜி சலீம் கேட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்.

ஆறு வருட தேடலுக்குப் பிறகு அவர் இயக்கும் 'லாந்தர்' படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். இந்தப் படத்திற்கான முதல் பாடலை இசையமைத்து அவரிடம் வழங்கிய போது, அதைக் கேட்டு அவர் மெலிதாக புன்னகைத்தவுடன் வெற்றி பெற்று விட்டோம் என்ற எண்ணம் எங்களுக்குள் ஏற்பட்டது.‌ அதன் பிறகு இந்த படத்திற்காக நான்கு பாடல்களை உருவாக்கினோம். ஒவ்வொரு பாடலின் போதும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.  

படத்தின் இசைக்கு சிறப்பாக உதவியவர் ஸ்ரீ விஷ்ணு.‌ அவர் வழங்கிய சின்ன சின்ன ஆலோசனைகள் படத்தின் பாடல்கள் சிறப்பாக வருவதற்கு பேருதவி புரிந்தன. இதற்காக இந்த தருணத்தில் அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


படத்தின் நாயகி ஸ்வேதா டோரத்தி பேசுவையில், ''லாந்தர் என்பது இரவின் அடையாளம். இந்தப் படம் எனக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.‌ இதற்காகவே படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

எம் சினிமாஸ் பட நிறுவனம் போல் ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி..படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் கண்ணசைவுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் ஞானசௌந்தர் இயங்குவார். அந்த அளவிற்கு இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் இடையே ஒரு புரிதல் இருந்தது. 

படத்தின் இசையமைப்பாளரான பிரவீனின் பாடல்களுக்கு நான் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். தூய தமிழில் பாடல்களை வழங்கியதற்காக பாடலாசிரியர்கள் தேவா மற்றும் உமாதேவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், ''படக்குழுவினர் அனைவருக்கும் முதலில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இது முதல் படம். அதனால் தங்களது இந்த படைப்பை உயிரைக் கொடுத்து உருவாக்கி இருப்பார்கள். தயாரிப்பாளருக்கும் இது முதல் திரைப்படம் என்பதால் அவரும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இயக்குநர் சலீம் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார்.  எனக்கு அவர் ஆட்டோ ஓட்டுநராகத்தான் அறிமுகமானார். அப்போதே சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாக செய்தார்.‌ இவரது நேர்மை குறித்து பல செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியாகி இருக்கிறது.

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு, சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது முயற்சி எனக்கு வியப்பை அளித்தது. அவரிடம் யாராவது அரை மணி நேரம் பேசினால் போதும், அவரிடம் அவ்வளவு கதைகள் உள்ளன.‌ வித்தியாசமான கதாபாத்திரங்களை பற்றியும், கதைக்கு தேவையான விஷயங்களை பற்றியும் விரிவாக சொல்வார். 

நடிகர் விதார்த்திற்கு நன்றி. அறிமுகமற்ற படைப்பாளிகளை கூட, அவர்களுடைய உணர்வுகளை மதித்து கதையைக் கேட்டு, மிக எளிமையாக பழகும் நபர் அவர். அதனால் அவருடன் இன்று வரை ஒரு நல்ல நட்பு தொடர்கிறது,'' என்றார்.


நாயகன் விதார்த் பேசுகையில், ''நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.

படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்கள். இந்த திரைப்படத்தின் மூலம் அவர்களின் திறமை வெளியே தெரியும்.‌

பாடலாசிரியர் தேவாவிற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நான் ஏராளமான தயாரிப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பத்ரி போன்ற ஒரு தன்னடக்கம் மிகுந்த மனிதரை சந்தித்ததில்லை.‌ பார்ப்பதற்கு எளிமையான மனிதராக இருந்தாலும் அவர் பெரிய ஆள்.  இவரிடம் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான். சினிமா மீது இவர் வைத்திருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.‌ ஏனெனில் இவர் 'லாந்தர்' படத்தின் மூலம் வெற்றியை பெற்றால் தொடர்ந்து படங்களை தயாரிப்பார்," என்றார்.


இயக்குநர் ஷாஜீ சலீம் பேசுகையில், ''என்னுடைய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.‌ ஏனெனில் நான் சொன்ன கதையை நம்பி முதலீடு செய்து எந்த தடங்கலும் இல்லாமல் படத்தின் பணியை நிறைவு செய்திருக்கிறார்.‌ அவருடன் பழகிய இந்த ஒரு வருடத்தில் தான் என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஏறி இருக்கிறது.‌ பணத்தை கேட்பதற்கு முன்பே என்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி விடுவார். என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த படக் குழுவினர் மீதும் அவருடைய அக்கறையான அரவணைப்பு இருந்தது.‌

என்னுடைய தந்தையார் கே. எல். முகமது ஷெரிப் என்னுடைய சிறிய வயதில் நாவல்களை வாங்கி தந்து படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அதன் பிறகு வாசித்த கதைகளை சொல்லச் சொல்லி கேட்பார்.‌ அதன் பிறகு சில கதைகளை எழுதச் சொல்லி பயிற்சியும் தந்திருக்கிறார். அவர் இன்று இல்லை என்றாலும் அன்று அவர் அளித்த பயிற்சிதான் இன்று என்னை மேடையேற்றி இருக்கிறது.

நான் திரைத்துறையில் வாய்ப்பு தேடுவதற்கு முன் என் மாமியாரிடம் தான் அனுமதி கேட்டேன். ஏனெனில் எனக்கென்று ஒரு குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, திரைத் துறையில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன். அந்த தருணத்தில் 'உங்களால் வெற்றி பெற முடியும். நீங்கள் சென்று வாருங்கள். நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்' என்று அவர் உறுதிமொழி அளித்தார். அவர் தாயாக இருந்து குடும்பத்தை பாதுகாத்ததால் தான் என்னால் திரைத்துறையில் பணியாற்ற முடிந்தது.

இதனைத் தொடர்ந்து என்னுடைய மனைவி சஜிதா பானு. மற்றவர்கள் செய்த உதவியை வேறு எந்த வகையிலாவது அவர்களுக்கு என்னால் பதிலுக்கு செய்திட இயலும். ஆனால் எனக்காக என்னுடைய மனைவி பதினைந்து ஆண்டுகாலம் வாழ்க்கையை தியாகம் செய்தார். அதை எந்த வகையிலும் என்னால் திருப்பித் தர இயலாது. இனிமேல் அவர்களை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.‌ இவர் இல்லையென்றால் இன்று நான் மேடையில் ஏறி பேசியிருக்க இயலாது.

இத்திரைப்படத்தை இருபத்தி மூன்று நாட்களில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு கடுமையாக உழைத்தவர்கள் என்னுடைய உதவி  இயக்குநர்கள். அவர்கள் உதவி இயக்குநர்கள் அல்ல. உதவிய இயக்குநர்கள். இவர்களைத் தொடர்ந்து படப்பிடிப்பு முதல் தற்போது வரை  உதவிக் கொண்டிருக்கும் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி.

படத்தின் இசையமைப்பாளரான பிரவீன் எங்களுடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார். பாடல்களையும், பின்னணி இசையும் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும்  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு விதார்த் போன்றதொரு அனுபவம் வாய்ந்த நடிகர் கிடைத்துவிட்டால் ஐம்பது சதவீத சுமை குறைந்து விடும். ஏனெனில் கதை சொல்லும் போதே அவர் தனக்கான பங்களிப்பை தீர்மானித்து விடுவார். அவரிடம் படபிடிப்பு தளத்தில் காட்சிகளையும், வசனங்களையும் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.

இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து சில வரிகளில் தான் விவரித்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் எதிர்பார்த்ததை விட அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு வருகை தந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் வியந்து விட்டேன்.‌ இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

TILL DEATH DO THEY PART



Tom Hardy is coming back with Venom: The Last Dance| RELEASING IN INDIA ON 25th October, 2024


English Trailer: https://youtu.be/MbIoY50ZOxg


Tamil Link: https://youtu.be/jbkxueTk3CA


Fans of the Venom franchise are in for a treat as Tom Hardy returns to the big screen with his iconic role as Eddie Brock in the highly anticipated film, Venom: The Last Dance. 

In Venom: The Last Dance, Tom Hardy returns as Venom, one of Marvel’s greatest and most complex characters, for the final film in the trilogy. Eddie and Venom are on the run. Hunted by both of their worlds and with the net closing in, the duo are forced into a devastating decision that will bring the curtains down on Venom and Eddie's last dance.

The film stars Tom Hardy, Chiwetel Ejiofor, Juno Temple, Rhys Ifans, Peggy Lu, Alanna Ubach and Stephen Graham. The film is directed by Kelly Marcel from a screenplay she wrote, based on a story by Hardy and Marcel. The film is produced by Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy and Hutch Parker.

Sony Pictures Entertainment India will exclusively release Venom: The Last Dance in Indian cinemas on 25th October 2024, in English, Hindi, Tamil and Telugu.

High-Equity Rehabilitation Program Addressing Physical, Mental, and Emotional Needs for Geriatric Long-Stay Patients




Chennai: 

Dr. Mehta's Hospitals, the most trusted private hospital across generations, has launched the Geriatric Long Term Care Ward at the Global Campus in Velappanchavadi. This facility allows clinicians to monitor and provide in-patient treatments for elderly people with chronic illnesses, their associated complications, and age-related disabilities. 

Padma Shri Dr. V S Natarajan, the Father of Geriatric Medicine in India, alongside Dr. K Bhanu, Senior Neurologist of Dr. Mehta's Hospitals, and Dr. Anitha Ramesh, Senior Medical Oncologist graced the event.

Expressing his thoughts on the occasion, Padma Shri Dr. V S Natarajan says, "The launch of the new Geriatric Long Term Care Ward is a significant step forward by Dr. Mehta's Hospitals to improve the lives of senior citizens in our community. And it sets a standard for long-term healthcare services.” 

“The hospital has excelled in geriatric care since the inception of Dr. Mehta’s Global Campus, and now it has been improvised with the Geriatric Long Term Care Ward, providing in-patient services for senior citizens,” said Mr. Sameer Mehta, Vice Chairman, Dr. Mehta’s Hospitals. 

Dr. Pranav Mehta, Director, Dr. Mehta’s Hospitals addressed the physical, mental, and emotional health needs of geriatric long stay patients through the high-equity rehabilitation program, equipped with an in-house diagnostic facility, experienced geriatricians and their teams, physiotherapy care, and intensive care.

Dr. Shanthi, HOD Department of Geriatrics and Senior Consultant Geriatric Physician, stated that “at Dr. Mehta’s Hospitals, we believe that every individual deserves personalized care, and the geriatric long term care ward with modern facilities & features, 24/7 medical support, and individualized care embodies our commitment to fulfill that promise.” 



About Dr Mehta's Hospitals:

Dr Mehta's is a leading health innovation company focused on improving people's health and well-being and enabling better outcomes across the health continuum – from healthy living and prevention to diagnosis, treatment and home care.

Dr Mehta's leverages advanced technology and deep clinical and consumer insights to deliver integrated solutions. Headquartered in Chennai, the hospital is a leader in clinical outcomes, surgeries, paediatrics, women's health, transplants, Paediatric intensive care, Neonatal intensive care, Cardiology, Urology and many others, as well as in consumer health and home care. The institution has two units with 400 beds with 80 different specialities treated by 500 expert clinicians.

பிதா திரைப்பட அறிவிப்பு விழா!



சென்னை:

SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார்

தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்...


நடிகை லக்‌ஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது...

மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும்.  எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி  நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது,  கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  



தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது...

பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைக்குத் தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப்பெரியதாகி விட்டது. படத்தின் பட்ஜெட் எங்கோ போய்விட்ட நிலையில், இந்த மாதிரி புது அறிமுகங்கள் வர வேண்டும். மதியழகன் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து, நல்ல படங்கள் செய்ய வாழ்த்துக்கள். கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  எல்லோரையும் மகிழ்விக்கும் படமாகப் பிதா வர வாழ்த்துக்கள் 



இயக்குநர் சரவணன் சுப்பையா பேசியதாவது...

இப்படத்தின் தயாரிப்பாளர் நிறையப் படம் செய்துள்ளார். பல படங்கள் செய்யும் நிலையில் இந்தப்படத்தைத் தயாரிக்கக் காரணம் இந்தக்கதை தந்த இம்பாக்ட் தான். இந்தக்கதையை உருவாக்கிய கார்த்திக் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  


இயக்குநர் சரண் பேசியதாவது...

பிதா அன்மாஸ்கிங். இந்த அன்மாஸ்கிங் என்பது இனிமேல் தமிழ் சினிமாவில் டிரெண்டாக இருக்கும். ஒரு தயாரிப்பாளர் ஹீரோவாக களமிறங்குகிறார். கார்த்திக் குமார் இயக்குகிறார் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே நான் வந்துள்ளேன். படத்தின் காட்சிகள் பார்த்தேன் வனிதாவையே கடுப்போடுட்டு விட்டார்கள் என்றால் இவர்கள் ரசிகர்களையும் கட்டிப் போட்டு விடுவார்கள். இசை ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக உள்ளது. பெரிய நம்பிக்கை தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 


K R வெங்கடேஷ் பேசியதாவது...

அனைத்து பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள். பிதா எனும் பெயரில் இன்னொரு படம் வருவதாகச் சொன்னார்கள். ஒரு தொகுதியில் ஜெயிக்க கூடிய கேண்டிடேட் பேரில் 10 கேண்டிடேட் போடுவார்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள மதி மிகப்பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  


திருமதி சுந்தரவள்ளி பேசியதாவது...

தமிழ் நாட்டில் அதிக படம் பார்த்த ஆட்களில் ஒரு ஆள் நான். தமிழ் சினிமா இப்போது இளைஞர்கள் கையில் சென்றுள்ளது. மறுக்கப்பட்ட கதைகளை, தவிர்க்கப்பட்ட கதைகளை வெளிப்படுத்தி இந்திய அளவில் எடுத்துச் செல்லும் சினிமாக்கள் வருகிறது. இப்படமும் இளைஞர்களால் உருவாகியுள்ளது. எனக்கு டிரெய்லர் பிடித்திருந்தது. காட்சிகள் இசை எல்லாம் நன்றாக உள்ளது. இப்படம் நல்ல கருத்தைச் சொல்லும் என நம்புகிறேன். கதையின் நாயகன் மதியழகன், தயாரிப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். நன்றி. 


நடிகர் குணா பேசியதாவது

மண்டியிட்டு வாழ்வதைவிட சண்டையிட்டு சாவதே மேல் என்ன சொன்னான் என் அண்ணன் வேலு பிரபாகரன். நான் இந்த விழாவிற்கு வந்ததற்கான காரணம் அண்ணன் வேலு பிரபாகரன் தான்.  இந்த படைப்பைத் தம்பி கார்த்திக் நன்றாக எடுத்து இருப்பார் என்று நம்புகிறேன்.   தயாரிப்பாளர் மதியழகன் பல திரைப்படங்களை எடுத்துள்ளார், அவர் சமீபத்தில் எடுத்த சாமானியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் இந்த வீடு பேங்கினுடையது உங்களுடையது அல்ல என,  மக்களிடம் கொள்ளையடிக்கும் பேங்க் பற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த கதையை எழுதியவர் தான் கார்த்திக். அவரை வைத்து இப்போது மதியழகன் நடித்து எடுத்திருக்கும் படம் கண்டிப்பாக ஒரு நல்ல படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்


நடிகர்  மணிகண்டன் பேசியதாவது...

பிதா டிரெய்லர் மிரட்டுகிறது. முழுக்க இளைஞர்களாக இருக்கிறார்கள். நன்றாகச் செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் எதிர்காலம் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இன்று பல படங்கள் வெளியிடப்பட முடியாமல் உள்ளது. கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும். பிதா ஜெயிக்க எனது வாழ்த்துக்கள். 



பாபி மாஸ்டர் பேசியதாவது...

மதி சாருக்கும் எனக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளது. அவரெடுத்த எல்லாப்படத்திலும் நான் இருப்பேன். அவரது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை எப்போதும் முழுமையாக நம்புபவர் அவர். மதி சாரின் எல்லாப்படங்களிலும் என் பங்கு இருக்கும். ஒரு நல்ல ஹீரோ சினிமாவுக்கு அறிமுகமாகிறார் அவர் பெரிய உயரம் செல்ல வேண்டும். வாழ்த்துக்கள். 


திருமுருகன் காந்தி பேசியதாவது... 

திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாகப் படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது. நல்ல படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன். ஈழத்தினை பற்றிப் பேசும்போது மனதில் பெரும் வலி இருக்கிறது. இங்கு ஈழத்திற்காக போராடிய அண்ணன் பிரபாகரன் பெயரைக்கூடச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது.  அதைப்பற்றிப் பேசவே பயப்படும் காலத்தில், ஒரு படைப்பைத் தர முயலும் இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 


சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது.. 

டிரெய்லர் பார்த்தேன். நன்றாக உள்ளது. திரை பிரபலங்கள் அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்த பாராட்டை மனதில் வைத்து நல்ல திரைக்கதையை அமைத்துப் படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். இப்படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.  


நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது...

 எனது தண்டுபாளையம் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் விழா நடக்கிறது. இங்கு பர்சனலாக ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன், எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பல பர்சனல் பக்கங்கள் இருக்கும். அதில் நடக்கும் விஷயங்கள் நம்மை முடக்கிவிடும் ஆனாலும் அதைத் தாண்டி நல்ல விஷயங்களும் நடக்கும்.  எக்ஸாம் தோல்வி  அடைந்தால் சூசைட், காதல் தோல்வி அடைந்தால் சூசைட்   என்ற நிலை இப்போது இருக்கிறது ஆனால் அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது வெற்றி இருக்கிறது உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழுங்கள்  வெற்றியை எதிர்பார்க்கத் தேவையில்லை அது உங்களை வந்தடையும்.  இப்படம் கதை எனக்குப் பிடித்திருந்தது, எனக்கு இதில் பிராஸ்தடிக் மேக்கப், அதைச் சாதாரணமாக நினைத்து விட்டேன், அதன் பிறகு தான் புரிந்தது மிக மகிழ்ச்சியாக ரசித்து இந்த வேலையைச் செய்தேன்.  இந்தப்படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது. திட்டமிட்டு உழைத்தார்கள். கார்த்திக் மதியழகன் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பேசுகிறேன் எல்லோருக்கும் நன்றி. 



தயாரிப்பாளர் நடிகர் V மதி பேசியதாவது...

இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.  உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள் ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் சார் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும்  தாருங்கள் நன்றி.


இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது..

எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில்  நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள் ஆனால் மதியழகன் சார் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 



நாஞ்சில் சம்பத் பேசியதாவது..

நண்பர் தம்பி கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வரவில்லை. பல படங்கள் சென்சார் பிரச்சனைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது.  நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள். சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார். 11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக்கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துக்கள் நன்றி.



நடிகர்கள் : V மதி, வனிதா விஜய்குமார், சரவணன் சுப்பையா மற்றும் பலர்


தொழில் நுட்ப குழு 

எழுத்து இயக்கம் : V கார்த்திக் குமார் 

தயாரிப்பாளர்: D பால சுப்ரமணி & C சதீஷ் குமார்

பேனர்: ஸ்ரீனிக் தயாரிப்பு

கிரியேட்டிவ் ஹெட்: ஸ்ரீதா ராவ்

இசை: ரஷாந்த் அர்வின்

ஒளிப்பதிவாளர்: பிராங்க்ளின் ரிச்சர்ட்

எடிட்டர் & கலரிஸ்ட் : MS.பாரதி

பாடல் வரிகள் - மதன் கார்க்கி, விவேக், விஜேபி ரகுபதி 

வணிக நிர்வாகி: உமாபதி ராஜா

கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன்

ஸ்டண்ட் டைரக்டர்: கனல் கண்ணன், ஸ்டன்னர் சாம்

ஆடை வடிவமைப்பாளர் - பவித்ரா சதீஷ்

ஆடை: SP சுகுமார்

ஒப்பனை: ரஷ்யா

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் BAD BOYS: RIDE OR DIE




'பேட் பாய்ஸ்' பட வரிசையில் நான்காவது பாகமான இது, 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)' படத்தின் தொடர்ச்சியாகும்.

ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), 'பேட் பாய்ஸ் 2 (2023)' படத்திற்கு வழி வகுத்தது (2003).

இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள்  இயக்கியுள்ளனர்! 

4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன்,   இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி  படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம்.


உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய 'பேட் பாய்ஸ்' அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர் ஒரு சுவாரசியமான திருப்பத்துடன். மியாமியின் மிகச் சிறந்த டிடெக்ட்டிவ்ஸ் இம்முறை துரத்தப்படுகின்றனர்.



துப்பறியும் நிபுணர்கள்  மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி  காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை முன்னேறும்போது, துப்பறியும்  நிபுணர்கள்  துரத்தப்படுபவர்களாக மாறுவதால் , வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.


படக்குழு:-

நடிகர்கள்: Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith ​​with Tiffany Haddish and Joe Pantoliano.

இயக்கம்: Adil & Bilall

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், IMAX இலும், ஜூன் 6, 2024 அன்று இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா.

தி அக்காலி விமர்சனம் 




“பி பி எஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து, முகமத் ஆசிப் ஹமீது இயக்கியிருக்கும் படம் ‘தி அக்காலி’. இதில் நாசர், ஜெயக்குமார், ‘தலைவாசல்’ விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா, வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

போதைப் பொருள் கடத்தல் குறித்து விசாரித்து வருகிறார் போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மான். கல்லறையில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைப்பதாகக் கிடைக்கும் தகவலை அடுத்து ரகசியமாகக் கண்காணிக்கச் செல்லும்போது, சாத்தானை வழிபடும் குழு, விசித்திர பூஜை செய்து நரபலி கொடுப்பதை அறிகிறார். அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதை. 

முதல் பாதி திரைக்கதையை நடிகர் ஜெயக்குமார் ஆக்கிரமிக்கிறார். இரண்டாம் பாதி திரைக்கதையை நாசர் ஆக்கிரமித்திருக்கிறார். 'தலைவாசல்' விஜய். கொஞ்ச நேரம் வந்தாலும் வினோத் கிஷண் கவனிக்க வைக்கிறார். 

ஸ்வயம் சித்தா, வினோதினி எனத் துணை கதாபாத்திரங்களும் தங்கள் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் தேவை.... 

மொத்தத்தில் இந்த ‘தி அக்காலி’ - நரபலி விழிப்புணர்வு

RATING: 2.5/5


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.